புலம்பெயர்

மகிந்தவின் வருகைக்கு எதிராக லண்டன் விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம்

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரித்தானிய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமாக விமான நிலையத்தில் திடீர் போராட்டம் நடக்கவிருப்பதாக அறியப்படுகிறது.

இன்று சிறிலங்கா இருந்து (சிறிலங்கா.நேரம்) மாலை 11.35 மணிக்கு UL 509 என்ற இலக்கமுடைய ஏர் லங்கா விமானத்தில் மகிந்த லண்டன் நோக்கிப் புறப்பட்டுள்ளதாக ஊர்ஜிதமான செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர் கொழும்பில் இருந்து புறப்பட்ட UL509 விமானத்தில் மாலதீவு ஊடாக இன்று இலண்டன் நேரம் இரவு 19.45 மணிக்கு வந்தடைய இருந்த போது தற்போதய தகவல்களின் அடிப்படையில் தாமதமாக இன்று இரவு (பிரி.நேரம்) சுமார் 22.00 மணிக்கு Terminal- 4 ற்கு வந்தடையவுள்ளார்.

அவர் விமானநிலையத்துக்கு வரும்போது தமிழர்கள் தமது எதிர்ப்பைக் காண்பிக்க இன்று திடீர் போராட்டம் ஒன்று நடக்கவுள்ளது.

இப் போராட்டத்துக்கான அழைப்பை அனைத்துத் தமிழ் அமைப்புகளும் ஒன்றாக விடுத்துள்ளன. பிரித்தானிய மண்ணில் காலடி எடுத்துவைக்கும் மகிந்தவுக்கு முதல் எதிர்ப்பைக் காட்ட தமிழர்கள் உடனடியாக ஒன்று திரளுமாறு வேண்டப்படுகின்றனர்.

இன்று இரவு 10 மணிக்கு லண்டன் Heathrow விமானநிலையத்தில் உள்ள Terminal-4 ற்கு மக்களை உடனே அணி திரளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.

கறுப்பு உடைகளை அணிந்தும், கறுப்புக்கொடிகளை சுமந்தவாறும் இப் போராட்டம் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இனப்படுகொலை புரிந்து, பல்லாயிரம் தமிழர்களின் உயிரைக் குடித்த மகிந்த லண்டன் வருவதை தற்போது சட்டரீதியாக தடுக்கமுடியாத நிலை தோன்றியுள்ளது.

ஒரு நாட்டின் தலைவர் என்ற ரீதியில் அவரைக் கைதுசெய்ய இயலாது என்று பிரித்தானிய யூரிகள் அடங்கிய சபை விளக்கம் கொடுத்துள்ள நிலையில், இறுமாப்போடு பிரித்தானிய வரும் மகிந்தவுக்கு தகுந்த விதத்தில் கரி பூச மக்கள் ஒன்றுபடவேண்டும்.

பிரித்தானிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மக்கள் தமது எதிர்ப்பை அரசியல் ரீதியாகக் காண்பிக்கவேண்டும். இன்று போராட்டத்திற்கு வரும் மக்கள் தமது எதிர்ப்பை சாத்வீகமுறையில் தெரிவிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அத்தோடு குளிர் அதிகமாக உள்ள காரணத்தால் அதற்கேற்ற உடைகளையும் அணிந்துவருமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.