ஒலி-ஒளி சிறிலங்கா

"அரச பயங்கரவாதத்தின் பதிய போர்குற்ற காணொளி"-Channel 4

கடந்தவருடம் சிங்கள இராணுவம் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட யுத்தத்தின் போது செய்த அட்டூழியங்கள், சித்திரவதைகளை அவ்வப்போது Channel 4  தொலைக்காட்சி வெளிக்கொணர்கின்றன.

இந்த வகையில் மகிந்த ராசபக்சே லண்டனுக்கு நேற்று வந்திருக்கையில் இன்று மீண்டும் ஒரு காணொளியை Channel 4 ஒளிபரப்பியுள்ளது.

நேற்று லண்டனுக்கு வருகை தந்திருக்கும் போர்க்குற்றவாளி மகிந்த ராசபக்சே நாளை oxford பல்கலைக்கழகத்தில் உரையாற்றவுள்ள நிலையில் அடிக்கடி சிறிலங்காவின் போர்க்குற்றங்களை ஒளிபரப்பு செய்துகொண்டிருக்கும் Channel 4 செவ்விச் சேவையானது இன்றும் ஒரு போர்க்குற்ற காணொளியை வெளியிட்டுள்ளமை மகிந்தவை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மகிந்தவின் லண்டன் பயணத்தை எதிர்த்து குளிர்காலநிலையையும் பொருட்படுத்தாமல் விமானநிலையத்தில் புலம்பெயர் தமிழர்களால் ஆர்ப்பாட்டம் நடாத்தியும், அவ் எதிர்ப்புக்களையும் கருத்தில்கொள்ளாமல் போர்க்குற்றவாளி மகிந்தவை அனுமதித்தது பிரித்தானிய அரசாங்கம்.

ஆனால் இன்றைய Channel 4 காணொளியில் ஒளிபரப்பான பெண்கள் மீதான பாலியல் பலாத்காரத்தை பார்வையிடுமா பிரித்தானிய அரசு? பார்வையிடுமானால் மகிந்த ராசபக்சேவை கைது செய்யுமா? இவ்வாறான கேள்விக் கணைகள் ஒவ்வொரு ஈழத்தமிழர்களினதும் உள்ளத்தில் எழுந்துள்ளது.