சிறிலங்கா தமிழீழம்

சிறீலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர் பெண் ஊடகவியலாளர்

சிறீலங்கா இராணுவத்தால் கைகள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இரு இளம் தமிழ் பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் வன்னியில் இடம்பெற்ற போரில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பான மேலதிக ஆதாரங்களை சனல் போஃர் செய்தி நிறுவனம் நேற்று (30) வெளியிட்டிருந்தது. அதில் இளம் பெண்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் இழுத்துவரப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு,

பின்னர் இராணுவத்தினர் ரீ-56 ரக துப்பாக்கிகளால் அருகில் இருந்து சுட்டுப் படுகொலை செய்யும் காணட்சிகள் அடங்கியிருந்தன.

படுகொலை செய்யப்பட்ட இரு பெண்களில் ஒருவர் 27 வயதான தர்மதுரை சங்கீதா (சோபா) எனப்படும் இசைப்பிரியா என அடையாளம் காணப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் ஊடகப் பிரிவான நிதர்சனம் தொலைக்காட்சியில் அவர் ஊடகவியலாளராக பணியாற்றியிருந்தார்.

கீழே உள்ள படத்தின் மேல் அழுத்தி அந்த கொடுர காணொளியை பார்வையிடலாம்காணொளி மிகவும் கொடூரமானது. காணொளி, புகைப்படங்கள் எல்லோர் மனதையும் புண்படுத்தும். அதற்காக மன்னிப்புக்கேட்பதோடு, இப்போர்க்குற்றங்களை ஊடகங்களின் ஊடாகவே வெளிநாட்டு அமைப்புக்களுக்கு தெரியப்படுத்த முடியும் என்பதற்காக வெளியிடப்பட்டுள்ளது என்பதை தெரியப்படுத்துகின்றோம்.

முக்கிய குறிப்பு