சிறிலங்கா

"வீட்டுக்காவலில்" வைக்கப்பட்டிருந்த மகிந்தா நாடு திரும்பினார்.

மூன்று நாள் “விஜயத்தை” மேற்கொண்டு பிரித்தானியா சென்றிருந்த சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று ul 510 இலக்கமுடைய Srilankan விமானத்தில் இன்று பிற்பகல் 3.35 அளவில் சிறிலங்கா திரும்பினார். கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை வந்தடைந்த சிறிலங்கா ஜனாதிபதியை வரவேற்பதற்காக அமைச்சர்களும், சிங்கள மக்களும் அங்கு திரண்டிருந்தனர்.

Oxford ஒன்றியத்தில் உரையாற்றும் முகமாக சென்றிருந்த அவருக்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அங்கு உரையாற்றும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

இதனையடுத்து பிரித்தானிய அரசியல் தலைவர்களை அவர் சந்திக்க முயன்ற போதும் அதுவும் புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டத்தினால் சாத்தியமாகவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா சனாதிபதி லண்டனில் இருந்த 3 நாளும் தமிழ்மக்களால் “வீட்டுக்காவலில்” வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.