இந்தியா

தமிழ்நாட்டில் மகிந்தவிற்கு எதிராக போராட்டம் செய்த மாணவர்கள் கைது

பிரித்தானிய சென்றிருந்த இன வெறி பிடித்த போர்க்குற்றவாளி மகிந்த இராசபக்சேவை கைது செய்யக்கோரி சென்னையில் பிரித்தானிய தூதரகம் முன்னால் தமிழ்நாடு மாணவர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ந.பன்னீர்செல்வம் தலைமையில் போராட்டம் நடத்தி மனு ஒன்றையும் தூதரகத்தில் அளித்துள்ளனர்.

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடாத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களை தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சினர் மற்றும் ஜாதி ஒழிப்பு விடுதலை முன்னணி ஆகியோர்கள் கலந்து கொண்டனர் .

போர் குற்றவாளி மகிந்தா பிரித்தானிய விமானநிலையத்தில் வந்திறங்கிய போது அங்கு வாழும் தமிழ் மக்கள் எந்த விதமான முன் அனுமதியும் இல்லாமல் விமானநிலையத்தில் நடாத்தினர். பலத்த கோசங்களுடன் ஆர்ப்பாட்டம் நடந்த போதும் பிரித்தானிய காவல் துறையினர் எவரையும் கைதுசெய்யவில்லை. ஆனால் தமிழர்களின் தாயகங்களின் ஒன்றான தமிழ்நாட்டில் மகிந்தவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வோரை தமிழ்நாடு காவல்துறை கைதுசெய்துள்ளது.

பிரித்தானியாவிடம் இருந்து “இந்தியா” விடுதலையடையாமல் இருந்திருந்தால் தமிழர் இன்று மகிந்தவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்திருக்கலாம்.

தமிழ் தேசியத்தின் விடுதலை என்பது தனித்தமிழீழத்தின் விடுதலை மட்டுமல்ல தனிதமிழகத்தின் விடுதலையுமே!