டென்மார்க் வந்த ஆயுததாரி பிள்ளையான் கைது செய்யப்படலாம்?

Home » homepage » டென்மார்க் வந்த ஆயுததாரி பிள்ளையான் கைது செய்யப்படலாம்?

சிறிலங்கா அரசின் தமிழினப்படுகொலைக்கு ஒத்தாசையாக இருந்தவனும், தமிழத்தேசிய விடுதலை போராளிகள் மற்றும் உணர்வாளர்களை படுகொலை செய்தவனுமான பிள்ளையான் எனப்படும் ஆயுததாரி சிவனேசதுரை சந்திரகாந்தன் தனது ஒருசில ஐரோப்பிய வாழ் சகாக்களை சந்திப்பதற்காக டென்மார்க் வந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஆயுததாரி பிள்ளையானின் டென்மார்க் வருகையை கடந்த வாரமே அறிந்த டென்மார்க் தமிழர் பேரவையின் மானிடவிவகாரகுழுவின் சிறப்புப்பிரிவினர் டென்மார்க் அரசின் அனைத்துலக குற்றவியல் பிரிவினரிடம்;; தமிழ்மக்கள் மீது ஆயுததாரி பிள்ளையான் புரிந்த மானிடத்திற்கெதிரான குற்றங்களில் சிலவற்றை சேகரித்து டென்மார்க் தமிழர் பேரவையின் வழக்கறிஞர் ஊடாக முறையிட்டுள்ளனர்.

மானிடத்திற்கெதிரான குற்றங்கள் புரிந்ததற்காக ஆயுதாரி பிள்ளையான் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும், ஆயுததாரியை கைது செய்து அனைத்துலக நீதிமன்றிலோ அல்லது டென்மார்க் நீதிமன்றிலோ நிறுத்துவது தொடர்பாக தான் விரைவில் தெரிவிப்பதாகவும் டென்மார்க் தமிழர் பேரவையின் வழக்கறிஞர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசுகள் புரிந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் கடந்த ஒக்ரோபர் மாதம் வழக்குப் பதிவு செய்த அதே வழக்கறிஞரே ஆயுததாரி மீதான வழக்கையும் இப்பொழுது பதிவுசெய்துள்ளார்.

ஆயுததாரி பிள்ளையான் டென்மார்க் காவல் துறையினரால் கைதுசெய்யப்படலாம் என்பதை அறிந்த ஆயுததாரியின் ஆதரவாளர்கள், ஆயுததாரி பிள்ளையானின் டென்மார்க் வருகையை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றை இரத்துச் செய்ததுடன் ஏனைய சந்திப்புகளையும் இரத்துச் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் ஆயுததாரியின் டென்மார்க் பயணமே இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் வதந்தியை பரப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆனால் இறுதியாக கிடைக்கப்பட்ட செய்திகளின் படி ஆயுததாரி பிள்ளையான் நேற்று(20.12.2010) டென்மார்க் தலைநகரை வந்தடைந்து, அவனது ஆதரவாளன் ஒருவனால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் நம்பிக்கையான தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயுததாரி பிள்ளையானால் படுகொலை செய்யப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள், மனிதவுரிமைசெயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்பான மேலதிக விபரங்களையும் ஆதாரங்களையும் உடனடியாக டென்மார்க் தமிழர் பேரவையினர் எதிர்பார்க்கின்றனர்.
ஆயுததாரியால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் ஆயுததாரி பிள்ளையான் தொடர்பான வழக்கை விசாரணை செய்து வரும் டென்மார்க் காவல்துறையின் விசேட பிரிவினரிடம் தங்கள் பதிவுகளை நேரடியாக மேற்கொள்ள டென்மார்க் தமிழர் பேரவையினரை தொடர்புகொள்ளவும். மின்னஞ்சல்: forum@dansktamilskforum.dk

ஆயுததாரி பிள்ளையான் மற்றும் அவனுடன் டென்மார்க் வந்துள்ள சகாக்கள் தொடர்பான விபரங்களையும் ஆயுததாரிகள் டென்மார்க்கில் தங்கியிருக்கும் விபரங்களையும் உடனடியாக டென்மார்க் தமிழர் பேரவைக்கு தெரிவித்து ஆயுததாரிகள் மீதான நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு டென்மார்க் வாழ் தமிழ்மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

மேலதிக தொடர்புகளுக்கு :
மின்னஞ்சல்: forum@dansktamilskforum.dk
தொலைபேசி: 004552173671


%d bloggers like this: