தமிழீழம்

இலங்கை படையினர் தண்டிக்கப்படுவதை விரும்பாத தமிழ் தேசியக் கூட்மைப்பு.

இலங்கை படையினராலும், துணை இராணுவக்குழுக்களினாலும் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என ரொரொன்டோ, லண்டன், ஒஸ்லோ ஆகிய நகரங்களில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் போராட்டத்தை ஆரம்பித்தபோது அவர்களுக்கு ஆதரவாக தமிழ் தேசியக் கூட்மைப்பு குரல் கொடுக்கும் என தமிழ் மக்கள் எதிர்பார்தனர்.

ஆனால் அவ்வாறு நடக்கவில்லை, மகிந்தாவும், அவரின் படையினரும் தண்டிக்கப்படுவதை தமிழத் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என கொள்கை ஆய்வுக் குழு (Policy Research Group) தனது ஆய்வுப் பத்தியில் தெரிவித்துள்ளது.

அதன் முக்கிய பகுதிகள் வருமாறு

விடுதலைப்புலிகள் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்டபோது, தமிழத் தேசியக் கூட்டமைப்பு உள்ளதாக பலரும் நம்பினார்கள். ஆனால் அதன் மௌனம் தோல்விக்கான அடையாளமாகவே கருதப்படுகின்றது.

இலங்கை படையினராலும், துணை இராணுவக்குழுக்களினாலும் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என ரொரொன்டோ, லண்டன், ஒஸ்லோ ஆகிய நகரங்களில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் போராட்டத்தை ஆரம்பித்த போது அவர்களுக்கு ஆதரவாக தமிழத் தேசிய கூட்மைப்பு குரல் கொடுக்கும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்தது இயற்கையானது.

ஆனால் நடைபெற்றது மறுதலையானது. புலம்பெயர் தமிழ் மக்களின் இந்த போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தரவில்லை என்பதுடன், அதனை அவர்கள் விரும்பவுமில்லை.

இலங்கையில் பெருமளவான அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதற்கு மகிந்தாவே காரணம் என சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஒ பிளேக் 2006 ஆம் ஆண்டு அனுப்பிய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தான் தமிழத் தேசிய கூட்மைப்பின் தலைவர் ஆர் சம்பந்தனுடன் பேசியபோது, அவர் அதனை புறக்கணித்ததாகவும், படுகொலைகளை பெரிதாக கருதவில்லை எனவும் பிளேக் தனது தகவலில் தெரிவித்துள்ளார்.

மகிந்தாவும், இலங்கை படையினரும் தண்டிக்கப்படுவார்கள் என்பதால் சம்பந்தன் அதனை விரும்பவில்லை.

ஒரு நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படுவதற்கு குற்றங்களை மேற்கொண்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

ஆனால் தமிழத் தேசிய கூட்டமைப்பின் மௌனமும், மகிந்தாவின் பிராந்திய பூகோள காய்நகர்த்தல்களும் இது தொடர்பில் வேறு வழிகளை அல்லது வேறு அரசியல் கட்டமைப்புக்களை உருவாக்கவேண்டிய சிந்தனையை தோற்றுவித்துள்ளது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.