டென்மார்க்

தமிழ்மக்களின் விடுதலை வேட்கையை மழுங்கச்செய்யும் மர்மமனிதர்கள்.

2009ம் ஆண்டு தமிழர்களின் படைப்பலம் மௌனிக்கப்பட்ட பின்பு தமிழீழமக்கள் சிறிலங்கா அரசபடைகளின் திறந்தவெளிச்சிறைகளிலும் வதைமுகாம்களிலும் அடைக்கப்பட்டுள்ளதால் தமது விடுதலை வேட்கையை வெளிப்படுத்தவோ சுதந்திரமாக தமது கருத்துக்களை கூறவோ முடியாத நிலையில் உள்ளனர்.

அண்மையில் தனது கிரமாத்தில் ஆயுததாரி டக்ளசுவின் குழுவினரால் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வால் ஏற்ப்பட்டுக்கொண்டிருக்கும் அபாயத்தை ஆதாரங்களுடன் தனது facebook எனப்படும் வலையத்தில் வெளிப்படுத்திய இளைஞன் ஆயுததாரிகளால் சுட்டுக்கொள்ளப்பட்டார்.

சிறிலங்கா அரசு அபிவிருத்தி என்று கூறிக்கொண்டு தன்னால் குடியேற்றப்பட்ட சிங்களவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொண்டுவருகின்றது. யாழ்ப்பாணத்தில் நாவற்க்குளி பிரதேசத்தில் குடியேற்றப்பட்ட சிங்களவர்களின் பிரயாணத்திற்காகவும் மேலதிக சிங்களவர்களை குடியேற்ற வசதியாகவும் அண்மையில் கேரதீவு சங்குபிட்டி பாலம் சிறிலங்கா அதிபரால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

தமிழீழ தாயகத்தில் மக்கள் தமது விடுதலை வேட்கையை பல முறை மறைமுகமாக தம்மால் வெளிப்படுத்த முடிந்த வேளைகளில் தெரிவித்துவருகின்றனர். 2009 இற்கு பின்னர் சிறிலங்காவால் தமிழீழப்பகுதிகளில் நடாத்தப்பட்ட தேர்தல்களை நாம் பார்க்கலாம்.

புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களே தொடர்ச்சியாக தமிழீழமக்களின் விடுதலை வேட்கையை எடுத்துரைத்துவருகின்றனர். புலம்பெயர்ந்து வாழும் தமிழீழமக்களின் ஒற்றுமையை குலைத்து அவர்களையும் அடிமைப்படுத்துவதற்காக சிறிலங்கா அரசு தொடச்சியாக முயற்சிசெய்துவருகின்றது.
சில அனைத்துலக நாட்டு அரசுகளும் தமிழீழ மககளின் விடுதலை வேட்கையை அபிவிருத்தி புனர்வாழ்வு என்று கூறி மழுங்கடிக்க முயற்ச்சிக்கின்றன.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களால் அமைக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய விடுதலை அமைப்புக்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போராட்டங்கள் சிறிலங்கா அரசிற்கு அழுத்தங்களை ஏற்படுத்திவரும் இன்றைய நிலையில் தமிழீழ மக்களுக்கு இப்பொழுது தேவை உணவு மட்டுமே என்னும் பொருளில் சில மர்மமனிதர்கள் புலம்பெயர் தேசங்களில் செயற்படுவதை காணக்கூடியதாகவுள்ளது.

தமிழ் தேசிய விடுதலை அமைப்புக்களின் அரசியல் செயற்பாடுகளை விமர்சனம் செய்வதுடன் அழுத்தங்களையும் இந்த மர்மமனிதர்கள் பிரயோகித்துவருகின்றனர். தமிழ் தேசிய விடுதலை அமைப்புக்களில் செயற்படுவோர்கள் மீது அழுத்தங்களை பிரயோகித்து அவர்களின் செயற்பாடுகளை முடக்க முயற்ச்சித்தும் வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட தமிழீழமக்களுக்கு உதிவிகளை செய்வதும் உதவிகள் சென்றடைய வழிசெய்வதும் புலம் பெயர் மக்களினதும் அமைப்புக்களினதும் தலையாய கடமை ஆனால் தமிழீழ மக்களின் விடுதலை வேட்கையை மழுங்கடிப்பதாக இவை அமையக்கூடாது.

தமிழ் தேசிய விடுதலை அமைப்புக்கள் வெளிப்படையாக தாயக மக்களுக்கு உதவிபுரிய முடியாத காரணத்தாலும் இந்த அமைப்புக்களின் உதவிகளை தாயக மக்களுக்கு சென்றடைய பாலமாக இருப்பவர்களின் பாதுகாப்பு காரணத்தால் தாம் தாயக மக்களுக்கு செய்யும் உதவிகளை விளம்பரம் செய்ய முடியாமல் இருப்பதை நாம் காணக்கூடியதாகவுள்ளது. இந்த காரணங்களை தமக்கு சாதகமாக இந்த மர்மமனிதர்கள் பயன்படுத்திவருகின்றனர்.

இந்த மர்மமனிதர்கள் புலம்பெயர் தேசங்களில் கட்டியமைக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய விடுதலை அமைப்புக்களிற்கு மக்கள் வழங்கிவரும் ஆதரவுகளை இல்லாதொழிப்பதுடன் மக்களிடையே ஒற்றுமையை குலைப்பதற்கும் முயற்ச்சி செய்துவருகின்றனர்.

புலம் பெயர்ந்து டென்மார்க்கில் வாழும் தமிழீழ மக்கள் தமிழ் தேசிய அமைப்புக்களுடன் இணைந்து மிகவும் ஒற்றுமையாக செயல்பட்டுவருகின்றனர். ஆனால் ஆயததாரி பிள்ளையானின் கடந்த டிசம்பர் மாத டென்மார்க் வருகையுடன் தமிழ் மக்கiளின் ஒற்றுமையை குலைக்கமுயற்சிப்பதுடன் தமிழீழ விடுதலை வேட்கையை மழுங்கடிந்து தமிழீழ தாயக மக்களை உணவுக்கு மட்டும் கையேந்தி நிற்க்கும் ஒரு இனமாகவும் இந்த மர்மமனிதர்கள் சித்தரித்துவருகின்றனர்.

ஆயததாரி பிள்ளையானின் டென்மார்க் வருகையை அறிந்த டென்மார்க் தமிழர் பேரவையினர் ஆயுததாரி தமிழ் மக்கள் மீது புரிந்த மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக பிள்ளையான் மீது வழக்குத்தொடுத்தனர்.

டென்மார்க்கில் இருந்து 2004 ம் ஆண்டு முதல் இயங்கி வந்த பிள்ளையானின் இணையத்தளம் திடீரென யப்பானுக்கு மாற்றப்பட்டதுடன் பிள்ளையான் தான் செய்த மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை மறைப்பதற்கும் தனது அரசியல் விளம்பரத்திற்குமாக மேற்கொண்ட முயற்சி தடைபெறவுள்ளதாகவும் ஆயுததாரி பிளளையானை டென்மார்க் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் சந்திக்க மறுத்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயுததாரியின் குற்றங்களை டென்மார்க் தொலைக்காட்சி “போர்க்குற்றவாளி டென்மார்க்கில்” என்று வெளிப்படுத்தியது.

ஆயுததாரி பிள்ளையான் மீது வழக்கு தொடர்ந்தவர்களை பிள்ளையான் தொடர்புகொண்டு பிரதேசவாத கருத்துக்களை தெரிவித்ததுடன் தான் செய்த குற்றங்களையும் ஒத்துக்கொண்ட போது பதிவுசெய்யப்பட்ட ஒலிநாடாவின் ஒரு பகுதி இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

ஆயுததாரி பிள்ளையான் ஐரோப்பிய நாடுகளுக்கு எனி வரும் பொழுது வழக்கின் முடிவுகள் வெளியிடப்படும் என வழக்கை தொடர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் டென்மார்க்கில் தமிழ் மக்களிடையே உள்ள ஒற்றுமையை குலைக்க களமிறக்கப்பட்டுள்ள மர்மமனிதர்கள் பிள்ளையான் மீது வழக்கு தொடர்ந்தது பிழையெனவும் தமிழ்மக்களுக்கு பிள்ளையான் செய்யவிருந்த உதவியை கெடுத்துவிட்டதாகவும் பிரச்சாரம் செய்துவருகின்றனர்.