தமிழீழம்

தமிழ் தேசிய முன்னணியினரின் வெள்ள நிவாரன நடவடிக்கை.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களான செ.கஜேந்திரன், சி.வரதராஐன், வி.மணிவண்ணன் ஆகியோர் இன்று மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி வழங்குவதற்காக மட்டக்களப்பிற்கு பயணமாகியுள்ளனர்.
அவர்கள் செல்லும் வழியில் மன்னம்பிட்டியில் வீதியை மூடி வெள்ளம் பாய்ந்தமையால் தொடர்ந்து பயணிக்க முடியாத நிலையில் கிரிதலை என்ற இடத்தினூடாக பயணம் செய்து நேற்று நள்ளிரவு மட்டக்களப்பைச் சென்றடைந்துள்ளனர். நேற்று நள்ளிரவு மட்டக்களப்பை சென்றடைந்த தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கான உதவிகளை வழங்குவவதோடு, மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விஜயம் செய்யவிருப்பதாகவும் தெரியவருகிறது.