தமிழீழம்

தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மையார் காலமானார்.

தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் தாயார் வேலுப்பிள்ளை பார்வதி அம்மையார் இன்று காலை யாழ்.வல்வெட்டித்துறை மருத்துவமனையில் காலமாகியுள்ளார்.

வன்னிப் போரின் பின்னர் நலன்புரி முகாம் ஒன்றில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கொழும்பு தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பார்வதி அம்மையார் கடும் நோய்த் தாக்கத்திற்கு உட்பட்டிருந்தார்.

தடுப்புக்காவலில் இருந்த கணவர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் 06-01-2010 அன்று உயிரிழந்ததை அடுத்து அவரது உடலம் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட போது பார்வதி அம்மையாரையும் இலங்கை அரசு விடுதலை செய்திருந்தது.