டென்மார்க்

தேசத்தின் தாய்க்கு டென்மார்க் தமிழர் பேரவையின் கண்ணிர் அஞ்சலிகள்.

இன்று சாவடைந்த தமிழீழ தேசத்தின் வீரத்தாய் பார்வதி அம்மாள் அவர்களிற்கு அஞ்சலி செலுத்தி டென்மார்க் தமிழர் பேரவையினர் டென்மார்க் வாழ் புலம்பெயர் தமிழீழ மக்கள் சார்பாக இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். தேசத்தின் தாயின் சாவைத் தொடர்ந்து டென்மார்க் தமிழர் பேரவையின் செயற்குழுவிற்கான நடைபெறவிருந்த தேர்தல் பின்போடப்பட்டுள்ளதாகவும் டென்மார்க் தமிழர் பேரவையினர் தெரிவித்துள்ளனர். அஞ்சலி நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அறிக்கையின் முழு வடிவம் வறுமாறு:

தேசியத்தலைவரின் தாயாருக்கு கண்ணிர் அஞ்சலிகள்.

தமிழீழத்தேசியத்தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் சாவடைந்த செய்தி இன்று உலகத்தமிழ் மக்களையே கவலையில் ஆழ்த்தியுள்ளது. இழந்த சுதந்திரத்தை மீளப்பெற்று அனைத்துலகத்தில் இறைமையுள்ள ஒரு இனமாக தமிழினம் வாழ போராடும் தமிழீழத்தின் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பெற்ற வீரத்தாய் எங்கள் பார்வதி அம்மாள்.

தமிழின வரலாற்றின் மாபெரும் அவலம் முள்ளிவாய்காலில் இராசபக்சா குடும்பத்தால் அரங்கேற்றப்பட்ட போதும் உறுதியுடன் மக்களோடு மக்களாக இறுதிவரை அங்கிருந்த பார்வதி அம்மாள் அவர்கள் தனது கணவருடன் சர்வதேசத்தின் வாக்குறிதிகளை நம்பி முள்ளிவாய்காலை விட்டு வெளியேறிய மக்களுடன் சிறிலங்கா அரசால் வதைமுகாம்களில் இடம்பெயர்ந்தோர் என்ற பெயரில் அடைக்கப்பட்டார்.

வதைமுகாமில் அடைக்கப்பட்டிருந்த பார்வதி அம்மாளும் கணவரும் தமிழ் இனத்தின் தலைவனை பெற்றெடுத்ததற்காக சிறிலங்கா இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு அனைத்துலக சட்டங்களுக்கு மாறாக சிறைவைக்கப்பட்டனர.

தள்ளாத வயதில் நோய்வாய்ப்பட்டிருந்த திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் உரிய மருத்துவ வசதிகளின்றி சிறிலங்காப் படையினரின் தடுப்புக்காவலில் கடந்த வருடம் சாவடைந்தார்.

தேசியத்தலைவரின் தந்தையின் சாவைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட பார்வதி அம்மாள் மருத்துவ சிகிச்சைக்காக பல நாடுகளிற்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் அவர் விரும்பிய தமிழகத்திற்கு செல்ல தமிழக அரசால் மறுக்கப்பட்டதால் மீண்டும் சிறிலங்கா அரசால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தமிழீழத்தின் வீரநகர் வல்வெட்டித்துறைக்;கு சென்று வாழ்ந்தார்.

வல்வெட்டித்துறையில் மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த தேசியத்தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் அவர்கள் இன்று சாவடைந்தார்.

இவரது பிரிவால் துயருறும் இவரின் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் டென்மார்க் வாழ் ஈழத்தமிழ் மக்கள் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

“தமிழரின்; தாகம் தமிழீழத் தாயகம்”

நிர்வாகம்
டென்மார்க் தமிழர் பேரவை
டென்மார்க்.

பின் குறிப்பு: அமரர் வேலுப்பிள்ளை பார்வதி அம்மாள் அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் டென்மார்க்கின் பல பகுதிகளில் நடைபெற்றுவருவதால் வரும் ஞாயிற்றுகிழமை 27.02.2011 அன்று நடைபெறவிருந்த டென்மார்க் தமிழர் பேரவையின் செயற்குழுவிற்கான தேர்தல் 27.03.2011 ஞாயிற்றுக்கிழமைக்கு பின்போடப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை டென்மார்க் தமிழர் பேரவையால் அமரர் வேலுப்பிள்ளை பார்வதி அம்மாள் அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் டென்மார்க்கின் பல நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் விரைவில் எமது இணையத்தளத்தில் அறியத்தரப்படும்.

 தேசியத்தலைவரின் தாயாருக்கு கண்ணிர் அஞ்சலிகள்.