ஒலி-ஒளி

"பிரபாகரன் வருவார் எங்களுக்கு நிம்மதி வரும்" -சிங்களம் சூழ்ந்துநிற்க குமுறிய ஈழத்தாய்

தமிழீழ தேசியத்தலைவரின் தாயார் பார்வதியம்மாளின் அஞ்சலியில் தமிழ்த்தாயொருவர் ஈழத்தின் சொல்லெண்ணா அவலங்களையும் சிங்களவன் காலில் தமிழன் படும் வேதனைகளையும் மனம்விட்டு கூறி கதறியழுதார்.பார்வதியம்மாளின் உடலத்திற்கு இராணுவத்தினரினதும் புலனாய்வாளர்களினதும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டும் சரளமாக காட்டுமிராண்டிகள் நின்றபோதும், எம் தேசத்து உறவுகள் பலர் தேசத்தாயின் இறுதியஞ்சலியில் மனம்விட்டு கதறியழுது தமது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.