லிபியா மக்கள் மீது குண்டுபோட சிறிலங்கா விமானிகள்

Home » homepage » லிபியா மக்கள் மீது குண்டுபோட சிறிலங்கா விமானிகள்

லிபியாவுடன் நெருக்கிய தொடர்புகளை கொண்டுள்ள சிறீலங்கா அரசையும் அதன் இராணுவத்தினரையும் அமெரிக்கா அவதானித்து வருகின்றது. சிறீலங்கா லிபியாவுக்கு உதவ முற்பட்டால், அது மிகப்பெரும் விலையை அதற்காக செலுத்தவேண்டி ஏற்படும் என அனைத்துலக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அனைத்துலக ஊடகம் ஒன்றிற்கு அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

லிபியாவுடன் நெருக்கிய தொடர்புகளை கொண்டுள்ள சிறீலங்கா அரசையும் அதன் இராணுவத்தினரையும் அமெரிக்கா வெளிவிவகார அமைச்சகம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

லிபியாவுக்கு உதவ சிறீலங்கா முற்பட்டால், அது மிகப்பெரும் விலையை அதற்காக செலுத்தவேண்டி ஏற்படும் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, போராட்டங்களை நடத்தும் மக்கள் மீது துல்லியமாக தாக்குவதற்கு லிபிய விமானிகள் தயங்குவதால், மக்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் விமானிகளை வாடகைக்கு அமர்த்த முவாமார் கடாபி திட்டமிட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


%d bloggers like this: