சிறிலங்கா

சிறிலங்காவின் விமானங்கள் நொருங்கியதில் போர்குற்றவாளி ஒருவன் கொல்லப்பட்டான்

பல ஆயிரம் தமிழ் மக்களின் குடியிருப்புக்கள் மற்றும் பொது இடங்கள் மீதும் அனைத்துலகத்தால் தடைசெய்யப்பட்ட குண்டுகளை போட்ட சிறிலங்காவின் மிகைஒலி விமானங்கள் இரண்டு வானில் வெடித்துசிதறியுள்ளது. வெடித்துச் சிதறிய விமானங்களில் ஒன்றின் விமானி கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங்கள மக்களின் குடியிருப்புகள் மீதே வெடித்துச்சிதறிய விமானங்கள் விடுந்ததாகவும் தெரிகின்றது. தமிழர்களின் வலியை சிங்களவர்கள் உணர ஆரம்பித்திருப்பதாக அவதானிகள் கருத்துக்கூறியுள்ளனர்.