கொலைக்குற்றவாளி டக்கிளசிற்கு முன்பிணை வழங்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

Home » homepage » கொலைக்குற்றவாளி டக்கிளசிற்கு முன்பிணை வழங்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் கொலை செய்துவிட்டு இலங்கைக்குத் தப்பி ஓடி அங்கு தற்போது அமைச்சராக உள்ள ஆயுததாரி டக்கிளசு தேவானந்தா தாக்கல் செய்திருந்த முன்பிணை மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்து விட்டது.

இலங்கையைச் சேர்ந்த ஆயுததாரி டக்கிளசு தேவானந்தா தற்போது ராஜபக்சே அரசில் அமைச்சராக இருக்கிறான். இவன் கடந்த 1986ம் ஆண்டு சென்னையில் தஞ்சம் புகுந்து தங்கியிருந்தபோது சூளைமேட்டைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரைக் கொலை செய்தான். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

பின்னர் ஆயுததாரி டக்கிளசு தேவானந்தா இலங்கைக்குத் தப்பி ஓடி விட்டான். இதையடுத்து அவனை தேடப்படும் குற்றவாளி என்று 1994ம் ஆண்டு சென்னை நீதிமன்றம் அறிவித்தது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ராஜபக்சேவுடன் ஜோடியாக டெல்லிக்கு வந்திருந்தான் ஆயுததாரி டக்கிளசு. பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்து கை குலுக்கி வரவேற்கப்பட்டான். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தேடப்படும் குற்றவாளியை பிரதமர் மன்மோகன் சிங் இப்படியா வரவேற்பது என்று கண்டனங்கள் எழுந்தன. டக்கிளசை கைது செய்யவும் கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து ராஜபக்சேவுடன் சேர்ந்து படு பத்திரமாக இருந்து பின்னர் இலங்கைக்குப் போய் விட்டான் டக்கிளசு.

இந்த நிலையில், தனது பெயரை தேடப்படுவோர் பட்டியலிலிருந்து நீக்கக் கோரியும், முன்பிணை வழங்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தான் ஆயுததாரி டக்கிளசு. இந்த இரு கோரிக்கைகளையும் இன்று உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

உரிய நீதிமன்றத்தில் ஆயுததாரி டக்கிளசு நேரில் ஆஜராகி முன்பிணை பெறலாம். அவனது பெயரை தேடப்படுவோர் பட்டியலிலிருந்து அதுவரை நீக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறிவிட்டது.


%d bloggers like this: