சிறிலங்கா

ஆயுததாரி முரளிதரனுக்கு அமெரிக்க வீசா மறுக்கப்பட்டுள்ளது

சிறிலங்காவின் மீள்குடியேற்ற விவகாரங்களுக்கான பிரதியமைச்சர் ஆயுததாரி விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு அமெரிக்கா செல்வதற்கான வீசா வழங்க கொழும்பிலுள்ள அமெரிக்கத்  தூதரகம் மறுத்துள்ளது.

சிறிலங்கா ஆணழகன் பிரசன்ன பீரிசு உடன் இணைந்து அமெரிக்கா செல்வதற்கு ஆயுததாரி முரளிதரனும் விண்ணப்பித்திருந்தான். அதன் போது ஆயுததாரின் வீசா விண்ணப்பம் காரணமாக சிறிலங்கா ஆணழகனுக்கான வீசாவும் மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அது மாத்திரமன்றி ஆயுததாரி தன் அந்தரங்கச் செயலாளரான தில்ருசு பெரேரா எனும் மங்கையையும் தன்னுடன் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல வீசாவுக்கு விண்ணப்பித்துள்ளான்.

ஆணழகன்  போட்டிகளில் ஆயுததாரி மற்றும் அவனது அந்தரங்கச் செயலாளருக்கு இம்மியளவும் தொடர்புகள் இல்லாமை மற்றும் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் சம்பவங்களில்  ஆயுததாரி முரளிதரனுக்கும் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுவதைக் காரணம் காட்டியே அமெரிக்கத் தூதரகம் அவனதும் அவனது அந்தரங்கச் செயலாளரினதும்  வீசா விண்ணப்பங்களை நிராகரித்துள்ளது.

இவ்வளவுக்கும் அவர்களது பயணத்துக்கு வீசா அனுமதி வழங்குமாறு விளையாட்டமைச்சின் அங்கீகாரம் கொண்ட கடிதமும் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே வீசா நிராகரிக்கப்பட்டுள்ளது.