தமிழீழம்

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிறிலங்கா படையணித் தலைமையகம்.

சிறிலங்கா இராணுவத்தின் 51 ஆவது படைத் தலைமையகம் நேற்றுக் காலை கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய புதிய தலைமையகத்தைத் திறந்துவைத்துள்ளான்.

யாழ் குடாநாட்டை சிறிலங்கா படைகள் ஆக்கிரமித்ததில் இருந்து சிறிலங்கா இராணுவத்தின் 51ஆவது படைத்தலைமையகம் யாழ்.நகரப் பகுதியில் அமைந்துள்ள Subass Hotel இல் இயங்கி வந்தது.

இந்நிலையில் சிறிலங்கா 51ஆவது படைத் தலைமையகத்தை யாழ்.நகருக்கு வெளியே நகர்த்துவதற்கான நடவடிக்கைகள் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு கோப்பாயில் இருந்த தமிழீழ விடுதலைக்கு வித்தான மாவீரர்கள் விதைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்த கல்லறைகள் இடித்து அழிக்கப்பட்டன. இதன் பின்பு சிறிலங்கா 51ஆவது படைத்தலைமையகத்தின் புதிய கட்டடம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு சீன அரசின் உதவியுடன் அங்கு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.