டென்மார்க்

"சிறிலங்கா பாராளமன்ற தமிழ் உறுப்பினர் மீதான தாக்குதலை அனைத்துலகம் கண்டிக்கவேண்டும்."- டென்மார்க் தமிழர் பேரவை

சிறிலங்கா பாராளமன்றத்தின் தமிழ் உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயர்சியை கண்டித்துள்ளதுடன் அனைத்துலகம் உடனடியாக தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் டென்மார்க் தமிழர் பேரவை இன்று வலியுறுத்தியுள்ளது. சிவஞானம் சிறிதரன் மீதான தாக்குதலு;ககு நீதீயான விசாரனையை கோருவதுடன் தமிழர் தாயகத்தில் தென்சூடானில் நாத்தப்பட்டது போன்று அனைத்துலகத்தால் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு தமிழர்கள் தங்கள் அரசியல் தீர்வை தெரிவுசெய்வதே இலங்கைத்தீவில் நிரந்தர அமைதியை உண்டாக்கும் எனவும் கண்டன அறிக்கையில் டென்மார்க் தமிழர் பேரவையின் அரசியல் விவகாரக்குழு தெரிவித்திருகின்றது.

சிறிலங்கா பாராளமன்றத்தின் தமிழ் உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயர்சியை கண்டித்து டென்மார்க் தமிழர் பேரவையின் அரசியல் விவகாரக்குழுவால் வெளியிடப்பட்ட முழுமையான அறிக்கை வருமாறு.

சிறிலங்கா பாராளமன்ற தமிழ் உறுப்பினர் மீதான தாக்குதலை அனைத்துலகம் கண்டிக்கவேண்டும்.

சிறிலங்கா பாராளமன்ற தமிழ் உறுப்பினர் மீதான தாக்குதலை அனைத்துலகம் கண்டிக்கவேண்டும்.
சிறிலங்கா பாராளமன்றத்தின் தமிழ் உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயர்சியை கண்டிப்பதுடன் அனைத்துலகம் உடனடியாக தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம்.

இன்று அனைத்துலகத்தில் பல நாடுகளில் மக்கள் பரட்சிகள் நடைபெற்றவண்ணம் உள்ளன. சர்வாதிகார அடக்குமுறைக்கு எதிராக எழுந்துள்ள மக்கள் பரட்சிக்கு அனைத்துலக சமூகம் அதரவளித்துவருவதையும் காணக்கூடியதாகவுள்ளது. ஆனால் அன்னிய சிங்களவர் தமிழர் தாயகத்தில் நடாத்தும் இனப்படுகொலையை எதிர்த்து தமிழ்மக்கள் நடாத்திய மக்கள் பரட்சிகள் சிங்கள படைகளின் வன்முறையால் நசுக்கப்பட்ட போது அனைத்துலகம் பாராமுகமாக இருந்ததமையே தமிழ் மக்கள் சிங்கள ஆக்கிரமிப்பு படைகளை எதிர்த்து படைக்கருவிகள் கொண்டு போராட வளிசமைத்தது. தமிழ்மக்களின் படைகருவிகள் இன்று மௌனிக்கப்பட்டு மீண்டும் சனநாயகவழியில் தொடர்கின்ற விடுதலைப்போராட்டத்தையும் அனைத்துலகம் மீண்டும் பாராமுகமாக இருப்பதாலேயே சிங்களத்தின் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு தொடர்கின்றது.

இலங்கைத்தீவில் தமிழ் மக்களின் தாயகத்தை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா படையினரால் தொடர்சியாக தமிழ் மக்களின் பாரம் பரிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுவருகின்றன. தமிழீழ மக்களினது விடுதலைக்காக போராடி வித்தான மாவீரர்களின் துயிலுமில்லங்கள் அழிக்கப்பட்டு சிறிலங்கா ஆக்கிரமிப்பு படைகளின் முகாம்கள் அமைக்கப்பட்டுவருகின்றது. அண்மையில் தமிழ்மக்களால் மதிக்கப்படும் தாய்தமிழக முன்னால் முதலமைச்சர் இராமச்சந்திரனின் உருவச்சிலையும் அசிங்கப்பட்டிருந்தது.

தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிப்புக்குள் உட்படுத்தப்பட்ட தமிழ் மக்கள் சனநாயக போராட்டங்களையே நாடாத்த முடியாத நிலைமையிலேயே சிறிலங்காவால் திணிக்கப்பட்ட சிறிலங்காவின் பாராமன்ற தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகள் கலந்துகொண்டனர். ஆனால் தமிழ் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மீதான தாக்குதல்களை மீண்டும் சிறிலங்கா ஆரம்பித்துள்ளது என்பதையே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சிறிலங்கா பாராளமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மீதான தாக்குதல் எடுத்துக்காட்டுகின்றது.

சிவஞானம் சிறிதரன் சிறிலங்கா பாரளமன்றத்தில் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதுடன் சிறிலங்கா படைகளால் மேற்கொள்ப்பட்ட இனப்படுகொலையின் சாட்சியாகவும் இருப்பதாலேயே இந்த தாக்குதல் முயர்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் தொடர்பாக நீதீயான விசாரனைக்கு சிறிலங்காவை வலியுறுத்துவதுடன் அனைத்துலக சமூகம் சிறலங்காவால் மேற்க்கொள்ளப்பட்ட மேற்கொள்ளப்படும் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை மீதான அனைத்துலக விசாரனையை காலம் தாழ்த்தாது மேற்கொள்ள வேண்டும்.

உள்நாட்டு மக்கள் பரட்சிகளுக்கு ஆதரவளிக்கும் அனைத்துலகம் தமிழ் மக்கள் மீது அன்னிய சிங்கள இனத்தால் மேற்கொள்ளப்படும் அடக்குமுறையை தடுப்பதுடன் அண்மையில் தென்சூடானில் மேற்க்கொள்ளப்பட்டது போன்று ஒரு வாக்கெடுப்பு தமிழர் தாயகத்தில் அனைத்துலக சமூகத்தால் மேற்கொள்ளப்பட்டு தமிழ் மக்கள் தமது அரசில் தீர்வை தாமே தெரிவுசெய்யவதே மீதீயாக உள்ள தமிழ் இனத்தை காப்பற்றும் என்பதுடன் இலங்கைத்தீவில் நிரந்திர அமைதியையும் ஏறப்படுத்தும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

“தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம்.”

இவண்
அரசியல் விவகாரக்குழு
டென்மார்க் தமிழர் பேரவை