சங்கிலியன் படையணியின் தாக்குதலில் சிறீலங்கா படை உயர் அதிகாரிகள் பலி?

Home » homepage » சங்கிலியன் படையணியின் தாக்குதலில் சிறீலங்கா படை உயர் அதிகாரிகள் பலி?

இன்று (24) இரவு 10:22 மணியளவில் கபரணைக் காட்டுப்பகுதியில் சிறீலங்காப்படைகளின் தொடர்அணி ஒன்றின்மீது நடாத்தப்பட்ட திடீர் கெரில்லா தாக்குதல் ஒன்றில் ஐந்து சிறீலங்கா படை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக சுயாதீனமாக ஊர்ஜிதம் செய்யமுடியாத செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலின் நடைபெற்ற போரின் இறுதிநாட்களில் வெள்ளைக்கொடியுடன் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு பா நடேசன், சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், கட்டளைத்தளபதி கேணல் ரமேஸ் ஆகியவர்கள் மீதான கோழைத்தனமான படுகொலை தாக்குதலுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரிகளே கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொல்லப்பட்ட இராணுவ அதிகாரிகளின் பெயர் விபரம் வருமாறு:

1 ஆவது சிறப்புபடைஅணியின் கட்டளை அதிகாரி மேஜர் மகிந்தராஜசிங்கே

1 ஆவது சிறப்புபடை அணியின் 2 ஆவது கட்டளை அதிகாரி மேஜர் விபுல திலக இலகே

சிறப்புப்படைஅணியின் கோல்ப் கெம்பனியின் கட்டளை அதிகாரி கப்டன் சமிந்தகுணசேகரா

“ரோமியோ” கொம்பனியின் கட்டளை அதிகாரி கப்டன் கவிந்த அபயசேகரா

“எக்கோ” படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் கோசல விஜயக்கோன்

ஆகியோரோ கொல்லப்பட்ட உயர்அதிகாரிகள்.

அத்துடன் இந்தத்தாக்குதலில் சிறீலங்காப்படைகளின் 59 ஆவது படையணியின் சிறப்புப்படை அதிகாரியான கேணல் அத்துல கொடி பீலி படுகாயத்துடன் உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ள சங்கிலியன் படையணி இத்தகைய தாக்குதல் வருங்காலத்தில் தொடரும் என்று தெரிவித்துள்ளதாகவும் ஊடக தகவல்கள் தெரிவித்துள்ளன.

மேலதிக விபரங்கள் தொடரும்…


%d bloggers like this: