தமிழீழம்

சங்கிலியன் படை மீண்டும் தாக்குதல்? ஆக்கிரமிப்பு படையணி அழிப்பு

வடகிழக்கு பிராந்தியக் தமிழீழக்கடலில் பயணித்த சிறிலங்கா ஆக்கிரமிப்பு கடற்படையினரின் 4 பேரை கொண்ட அணியொன்று காணாமற் போயிருப்பதாகவும் ஆக்கிரமிப்பு படையினர் பயன்படுத்திய வள்ளம் ஆக்கிரமிப்பு கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கை காரணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

முல்லைத்தீவின் சாலையில் அமைந்து  ஆக்கிரமிப்பு கடற்படை முகாமிலிருந்து அவர்களது சுண்டிக்குளம் முகாம் வரை பொருட்கள் எடுத்துச் சென்று கொண்டிருந்த நிலையிலேயே அவர்கள் காணாமற் போயுள்ளனர்.

அவர்கள் பயணித்த படகு எதுவித சேதமுமின்றி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து ஆக்கிரமிப்பு படையினர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது.

தமிழீழத்தை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா படைகள் மீது சங்கிலியன் படை தொடர் தாக்குதல்களை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுவரை இந்த தாக்குதல் தொடர்பான எந்த செய்திகளும் சங்கிலியன் படையால் வெளியிடப்படவில்லை.

ஆக்கிரமிப்பு கடற்படையினர் மீதான தாக்குதலை தொடர்ந்து உடுத்துறை, ஆழியவளை, தாளையடி, சுண்டிக்குளம், முல்லைத்தீவு போன்ற கரையோரப் பகுதி மக்கள் மீது ஆக்கிரமிப்பு படையினர் கோவமாக நடந்துகொண்டதோடு, மக்கள் அனைவரையும் பொதுமைதானத்தில் நிறுத்தி வீடுகளை சோதனை மேற்கொண்டதுடன், மக்களையும் சோதனைக்குள்ளாக்கி மிகவும் சிரமப்படுத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.