டென்மார்க் புலம்பெயர்

டென்மார்க்கில் இருந்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் நோக்கிய மிதிவணடிப்பயணம்

கடந்த வருடம் டென்மார்க்கில் மனிதநேய நடைப்பயணத்தை மேற்க்கொண்டவர்களில் இருவருவரான மனோகரன் மற்றும் பார்த்தீபன் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் நோக்கி மிதிவண்டிப்பயணம் ஒன்றை நாளை ஆரம்பிக்கின்றனர்.

சிறிலங்கா அரசு தமிழீழ மக்கள் மீது புரிந்த புரியும் இனப்படுகொலையை விசாரனை செய்யக்கோரி இவர்களின் வழக்கறிஞர் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை கடந்த வருடம் வேண்டியிருந்தார். கிடைக்கப்படும் முறைப்பாடுகளுக்கு 8 கிழமைகளிற்குள் பதில் வழங்க வேண்டும் என்ற விதிமுறைக்கு ஏற்ப அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் எந்த பதிலையும் வழங்காததால் மீண்டும் இந்த வருடம் சனவரி மாதம் புதிய ஆதாரங்களுடன் முறைப்பாடு டென்மார்க் வழக்கறிஞரால் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிக்கு அனுப்பப்பட்டிருக்கின்றது.

நாளை மே மாதம் 1ம் நாள் 53 அகவையுடைய மனோகரன் மனோரஞ்சிதனும் 33 அகவையுடைய பார்த்தீபன் தம்பியய்யாவும் தமது வழக்கறிஞரால் எழுதப்பட்ட புதிய முறைப்பாடுடன் மிதிவண்டியில் தாம் வாழும் Struer நகரத்தில் இருந்து 1000 கீமீ தொலைவில் உள்ள Den Haag நகரத்தில் இருக்கும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிற்கு சென்று நீதி கேட்கவுள்ளனர்.

அய்னா அதிபரால் நியமிக்கப்பட்ட முவர் கொண்ட குழு பரிந்துரைத்தது போன்று ஒரு அனைத்துலக விசாரனையை அய்னா மேற்கொள்ள சீனா மற்றும் இரசுயா போன்ற நாடுகள் எதிர்த்து வருகின்றன. ஆனால் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஒரு விசாரனையை மேற்கொள்ளுவதை எவரும் எதிர்க்கமுடியாது என்பதை சுட்டிக்காட்டிய மனோகரன் மனோரஞ்சிதன் அனைத்துலக விசாரனையை மேற்கொள்ள அய்னாவிற்கு அதிகாரமில்லை எனில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் நேரடியாக அதற்கான முனைப்பினை மேற்கொள்ள வேண்டும் என நேற்று அய்னாவின் முன்னய சிறிலங்காவிற்கான பேச்சாளர் நோர்வே ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டதை எடுத்துக்காட்டியதுடன் கடந்த வாரம் தமிழ் மனித உரிமை மன்ற செயளாளர் கிருபாகரன் வழங்கிய செவ்வியில் கூறியது போன்று அகைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு சிறலங்கா மீது விசாரனையை மேற்கொள்ள அதிகாரம் உண்டு எனவும் எடுத்துக்கூறினார்.

அய்னாவின் நடவடிக்கைகளை அதிகாரமுள்ள நாடுகள் முடக்கலாம் ஆனால் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் செயல்பாடுகளை முடக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என பார்த்தீபன் தம்பியய்யா கூறியதுடன் சிறிலங்கா அரசு தமிழீழமக்கள் மீது புரிந்த புரியும் இனப்படுகொலைக்காக அவர்களை கூண்டில் ஏற்றும் வரை தமது போராட்டங்கள் தொடரும் என ஆணித்தரமாக கூறினார்.

கடந்த வருடம் புலம்பெயர் தமிழீழ அமைப்புக்களால் பிரகடனப்படுத்தப்பட்ட போர்க்குற்ற நாளான மே 18ம் நாள் நெதர்லாந்தின் Den Haag நகரில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன்றலில் புலம்பெயர் மக்கள் ஒன்றுகூடவுள்ளனர். அன்று அங்கு சென்றடையவிருக்கு மிதிவண்டிப்பயணிகள் தாம் எடுத்துச்செல்லும் டென்மார்க் வழக்கறிஞரின் முறைப்பாட்டுடன் இவர்களாலும் புலம்பெயர் தமிழ் தேசிய அமைப்புக்களின் செயல்பாட்டாளர்களினாலும் சேகரிக்கப்படும் கையெளுத்துக்களையும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞரிடம் கையளிக்கவுள்ளனர்.

தமது இந்த போராட்டதிற்கு அனைத்து தமிழ் மக்களையும் அமைப்புக்களையும் ஊடகங்களையும் ஆதரவழிக்கும் படி இருவரும் வேண்டுவதாகவும் கூறியுள்ளனர்.

கடந்த வருடம் இவர்கள் மேற்கொண்ட மனிதநேய நடைபயணமும் இவர்களின் முறைப்பாடும் அனைத்து டென்மார்க் ஊடகங்களும் செய்தியாக்கியிருந்தனர். அதே போன்று இவர்களின் மிதிவண்டிப்பயணமும் டென்மார்க் ஊடகங்கள் முக்கியப்படுத்தக் கூடிய சமிக்கைகள் இப்பொழுதே தெரிவதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

தமது இந்த போராட்டத்தை தமிழ் மக்களுக்கு தெரிவித்து தமிழ்மக்களை போர்குற்ற நாளான மே18 இல் அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற முன்றலில் கூட உதவிசெய்யுமாறு புலம்பெயர் தமிழ் ஊடகங்களை தாம் வேண்டுவதாக மனோகரனும் பார்த்திபனும் தெரிவித்துள்ளனர்.

மிதிவண்டிப்பயணம் நாளை மே 1ம் நாள் Struer நகர மத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி  Herning நகரை அன்று சென்றடைவர் அடுத்த நாள் Vejle நகரை நோக்கி செல்லவிருக்கும் இவர்கள் மறுநாள்  Haderselv நகரரை நோக்கியும் அதற்கடுத்த நாள் சேர்மனி நாட்டு எல்லையை நோக்கியும் செல்லவுள்ளனர். தொடர்ந்து சேர்மன் நாட்டு நகரங்களுடாக நெதர்லாந்து நோக்கி இவர்களின் மிதிவண்டிப்பயணம் தொடரும்.