துரோகி மதி மட்டக்கிளப்பில் சுட்டுக்கொலை

Home » homepage » துரோகி மதி மட்டக்கிளப்பில் சுட்டுக்கொலை

மட்டக்களப்பு சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினரும் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினருடன் செயற்பட்டவருமான மதி என்றழைக்கப்படும் நடராசா மதியழகன் என்பவன் இன்று நண்பகல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான்.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள குறித்த நபரின் வீட்டுக்கு சென்ற இனந்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிசூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

ஆரம்பத்தில் ஈ.பி.டி.பி இயக்கத்துடன் இணைந்து செயற்பட்டு பின்னர் இராணுவ புலனாய்வு பிரிவில் இருந்து செயற்பட்டுவந்த இவர், மட்டக்களப்பில் நடைபெறும் ஆட்கடத்தல் கொள்ளை போன்ற வன்முறை சம்பவங்களின் பின்னணியில் இவர் செயற்பட்டு வந்ததாகவும் மட்டக்களப்பு மக்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்ட போது அங்கு சென்ற அவர் தன்னையே தலைவராக தெரிவு செய்ய வேண்டும் என நிர்வாகிகளை அச்சுறுத்தியதையடுத்து அவர்கள் மதி என்ற இந்நபரையே தலைவராக தெரிவு செய்திருந்தனர்.

தற்போது இவர் கருணா குழுவின் மட்டக்களப்பு பொறுப்பாளராக இருப்பதாகவும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு நகரப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

மட்டக்களப்பு நகரில் அரசாங்கத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை இவரே முன்னின்று ஏற்பாடு செய்வதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில வருடங்களுக்கு முதல் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வர ஆலய தீர்த்தோற்சவத்தில் வைத்து இவர் மீது விடுதலைப்புலிகள் துப்பாக்கி பிரயோகம் செய்த வேளை காயங்களுடன் தப்பி இருந்தார்.

பான் கீமூனின் அறிக்கைக்கு எதிராக அரச ஆதரவுடன் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடாத்துவதற்கும் இவரே திட்டமிட்டிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


%d bloggers like this: