டென்மார்க் புலம்பெயர்

நீதிக்கான மிதிவண்டிப்பயணிகள் நெதர்லாந்தை சென்றடைந்தனர்.

Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707

டென்மார்க்கில் Struer நகரில் வாழும் பார்த்தீபன் தம்பியய்யாவும் மனோகரன் மனோரஞ்சிதனும் கடந்த முதலாம் நாள் தாம் வாழும் நகரத்தில் இருந்து ஆரம்பித்த நீதிக்கான மிதிவண்டிப்பயணம் இன்று நெதர்லாந்து நாட்டு எல்லையை சென்றடைந்துள்ளது. கடந்த 4ம் நாள் சேர்மனிய எல்லையை சென்றடைந்த இவர்கள் சேர்மனியின் முக்கிய நகரங்களுடாக சுமார் 610 கிமீ தூரத்தை கடந்து இன்று நெதர்லாந்தின் எல்லை நகரமான Enschede நகரத்தை சென்றடைந்துள்ளனர்.

சேர்மனியில் பல அரசியல் தலைவர்கள், மனிதவுரிமை அமைப்பினர்களை சந்தித்து தமிழீழ மக்கள் மீது சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் இனப்படுகொலை தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர். சேர்மனிய ஊடகங்களுக்கும் செவ்விகளை கொடுத்துள்ளனர்.

நெதர்லாந்தில் சுமார் 250 கிமீ தூரங்களை மிதிவண்டியில் பயணித்து வரும் 18ம் நாள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் அமைந்திருக்கும் Den Haag  நகரத்தை சென்றடையவுள்ளனர்.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களால் கடந்த வருடம் போர்க்குற்ற நாளாக பிரகடனப்படுத்தப்பட்ட மே 18ம் நாள் ஐரோப்பிய வாம் புலம்பெயர் தமிழ் மக்கள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற முன்னிலையில் கூடி தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலைக்கு அனைத்துலகத்திடம் நீதிகேட்கவுள்ளனர்.

கடந்த வருடம் ஐப்பசி மாதம் முதல் தமது வழக்கறிஞருடாக தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் இனப்படுகொலை மற்றும் முள்ளிவாய்காலில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றம் தொடர்பான விசாரனையை ஆரம்பிக்குமாறு 2 தடவை வேண்டப்பட்டபோதும் பதில் எதுவும் கிடைக்காததால் இம்முறை வழமையாக தபாலில் முறைப்பாடுகளை அனைத்துலக குற்றிவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பிய தமது வழக்கறிஞரின் 3வது முறைப்பாட்டை மிதிவண்டியில் சென்று அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற வழக்குப்பதிவினரிடம் கையளிக்கப்போவதாக மிதிவண்டிப்பயணத்தை மேற்கொண்டிருக்கும் பார்த்தீபனும் மனோகரனும் தொடர்ச்சியாக தம்மை சந்திக்கும் ஊடகவியளாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் மனிதவுரிமை அமைப்பினரிடம் தெரிவித்துவருகின்றனர்.

நீதிக்கான இவர்களின் மிதிவண்டிப்பயணத்தின் ஒளிப்பதிவுகளை எமது வலைத்திரை WWW.TamilVoice.tv யில் பார்வையிடலாம் . நாளை முதல் ஐரோப்பிய நேரம் இரவு 8.30 மணிக்கு மிதிவண்டிப்பயணத்தை மேற்கொணடிருக்கும் மனோகரன் மனோரஞ்சிதன் மற்றும் பார்த்தீபன் தம்பியய்யாவுடனான செவ்வி எமது வலைத்திரையில் நேரஞ்சல் செய்யப்படும். நேயர்களும் கலந்துகொண்டு மிதிவண்டிப்பயணம் மேற்கொள்பவாகளுக்கு நேரடியாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளலாம்.