இந்தியா புலம்பெயர்

ஜெயலலிதா ஜெயராம் அவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் யேர்மன் ஈழத் தமிழர் மக்கள் அவை பாராட்டு

தமிழ்நாட்டு  சட்டசபைத்தேர்தலில் அமோக   வெற்றி பெற்ற  அதிமுக பொதுச் செயலாளரும் தமிழகத்தின்  புதிய முதல்வர்  மாண்புமிகு  செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களுக்கு, என்றும் எமக்காக குரல் கொடுக்கும் தமிழக மக்களுக்கும் எமது பாராட்டுதல்யேர்மன் ஈழத் தமிழர் மக்கள் அவை

தமிழ்நாட்டு சட்டசபைத்தேர்தலில் அமோக   வெற்றி  பெற்று புதிய அரசை அமைக்கவிருக்கும் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழகத்தின்  புதிய முதல்வர்  மாண்புமிகு  செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களுக்கும் என்றும்  ஈழத் தமிழர்களுக்காக தம் உயிரையும் அர்ப்பணித்து குரல் கொடுக்கும் தமிழக உறவுகளுக்கும்  எமது வாழ்த்துக்கள்  .

தமிழர்கள் மேல் தாண்டவம் ஆடும் சிங்கள இனவெறி அரசுக்கும்,  அந்தப்படுகொலைக்கு துணைநின்ற காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு நின்றதுக்கும் தமிழர்கள்  அனைவரும் சகோதர உரிமையுடன்   எம் உறவுகளை காப்பாற்றுங்கள் என கதறி கதறி தம்மை தாமே தீயிலிட்டு  கூட வேண்டிய பொழுதும் கபட நாடகம் அரங்கேற்றி அழிவின் விளிம்பில் நின்று துடித்த எம் உறவுகளை கைவிட்டு  அத்தோடு இன்று வரை எத்தனையோ எம் தமிழக உறவுகளான  மீனவர்கள் சிங்கள இனவெறி அரசால் படுகொலை செய்யப்படும் வேளையிலும்,  மௌனம் சாதித்து தடுத்து நிறுத்தாமல் இருப்பதுக்கும் கிடைத்த மக்கள் தீர்ப்பே தமிழ்நாட்டு சட்டசபைத்தேர்தல் முடிவுகள்.

தமிழ் நாட்டின்  புதிய முதல்வர் செல்வி  மாண்புமிகு ஜெயலலிதா ஜெயராம்  தலைமையில் அமைய இருக்கும் அரசு, விடுதலை வேண்டி நீதி தேடி இன்றும் சிங்கள இனவெறி அரசின் அரக்கத்தனத்தால் உயிர் வாழ துடிக்கும் ஒவ்வொரு ஈழத்தமிழர்களின் மனதிலும் அத்தோடு  உலகத்தமிழர்களின் மனதிலும் நம்பிக்கை எனும் மலரை  அரும்பு விட செய்துள்ளது .புதிய முதல்வர்  செல்வி மாண்புமிகு  ஜெயலலிதா ஜெயராம் முள்ளிவாய்க்கால் நேரத்திலும் அதற்கு பின்னரும் அத்தோடு தேர்தல் காலத்திலும் ஈழத்தமிழர்களுக்காக எழுப்பிய குரல் மற்றும் தமிழக மக்கள் கொடுத்த தீர்ப்பு ஈழத்தமிழர்களின்  நம்பிக்கைக்கு    உரம் சேர்க்கும் என்பது நிச்சயம் .

இனி வரும்காலங்களில் இலங்கை அரசை தண்டிக்க போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்கவும் ஈழத்தமிழர்களின் உரிமைகளை பெற்றெடுக்கவும் தமிழக மீனவர்கள் கொல்லப்படாமல் மற்றும் தமிழகத்தில் அகதிகளாக அல்லல்படும் எம் ஈழத்து உறவுகளை காக்கவும் உங்கள் தலைமையில் தமிழக அரசின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்ற நம்பிக்கையோடு அகதியாய்ப்போன ஈழத்தமிழர்களாகிய நாம் உலகப் பந்தில் பரந்து பிரிந்து வாழ்ந்தாலும் எம் இதயத்துடிப்பு தமிழீழமே  என்ற உணர்வுடன் மீண்டும் உங்களை மனமார வாழ்த்துகிறோம் .

அத்தோடு உங்கள் வெற்றிக்கும் ஈழத்தமிழர்களின் உரிமைக்கும் அயராது உழைக்கும் எமது தமிழக தொப்பிள்கொடி உறவுகளுக்கு எமது நன்றிகளை தெரிவிக்கின்றோம் .

நன்றி .

நம்பிக்கையுடன்,

யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை