மிதிவண்டிப்பயணிகள் நெதர்லாந்து தலைநகரை சென்றடைந்தனர்.

Home » homepage » மிதிவண்டிப்பயணிகள் நெதர்லாந்து தலைநகரை சென்றடைந்தனர்.

டென்மார்க்கில் வாழும் பார்த்தீபன் மற்றும் மனோகரனால் கடந்த 1ம் நாள் டென்மார்க்கில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான மிதிவண்டிப்பயணம் 1000 கிமீ தூரங்களை கடந்து நெதர்லாந்து தலைநகரை சென்றடைந்துள்ளது. நாளை 18;ம் நாள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற முன்றலை சென்றடையவிருக்கும் இவர்களை வரவேற்க்கவும் சிறிலங்கா அரசின் தமிழ்மக்கள் மீதான இனப்படுகொலையை விசாரனை செய்யுமாறு அலைத்துலக குற்றவியல் நீதிமன்றை வலியுறுத்தவும் ஐரோப்பா வாழ் புலம்பெயர் தமிழீழமக்கள் அங்கே ஒன்றுகூடவுள்ளனர். அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் மிதிவண்டிப்பயணிகள் எடுத்துச்செல்லும் தமது வழக்கறிஞரின் முறைப்பாட்டுடன் புலம்பெயர் தமிழீழமக்களால் சேகரிக்கப்பட்ட கையெளுத்துக்களையும் ஒப்படைக்கவுள்ளனர்.

பார்த்தீபன் மற்றும் மனோகரனால் மேற்கொள்ளப்பட்டுவரும் மிதிவண்டிப்பயணத்திற்கு டென்மார்க், சேர்மனி மற்றும் நெதர்லாந்து தமிழர் பேரவைகள் ஆதரவழித்து ஒழுங்கமைப்புக்களை செய்துவருகின்றனர்.

நீதிக்கான மிதிவண்டிப்பயணம் எமது வலைத்திரையில் ( www.tamilvoice.tv ) தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டுவருகின்றது. இன்று மாலை 8.30 மணிக்கு மிதிவண்டிப்பயணம் மேற்கொள்வோருடனான நேரடி செவ்வி ஒளிபரப்பவிருக்கின்றோம். நேயர்களும் மிதிவண்டிப்பயணிகளுடன் கலந்துரையாடமுடியும். அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம். 0031 684 72 80 21

நாளை 18ம் நாள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற முன்றலில் டென்மார்க், சேர்மனி மற்றும் நெதர்லாந்து தமிழர் பேரவைகளால் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் போர்குற்றவியல் நாள் ஒன்றுகூடல் எமது வலைத்திரையில் நேரஞ்சல் செய்யப்படும்.


%d bloggers like this: