தமிழ்வின் இணையத்தளத்தின் புலம்பெயர் தமிழ்மக்கள் மீதான உளவியல் போர்.

Home » homepage » தமிழ்வின் இணையத்தளத்தின் புலம்பெயர் தமிழ்மக்கள் மீதான உளவியல் போர்.
தமிழ்வின் இணையத்தளத்தின் புலம்பெயர் தமிழ்மக்கள் மீதான உளவியல் போர்.

அண்மைக்காலமாக புலம்பெயர் தமிழ் மக்களை குறிவைத்து பல பொய் செய்திகளை தமிழ்வின் இணையம் வெளியிட்டுவருவதை நாம் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.

கடந்த மே 18ம் நாள் போர் குற்றவியல் நாளன்று புலம் பெயர் தமிழ் மக்கள் நெதர்லாந்து De Haag நகரில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் முன்பாக ஒன்றுகூடவிருந்த பொழுது அதே நாளில் பல மாதங்களுக்கு முன் நெதர்லாந்து ஊடகத்தில் வெளிவந்த தமிழ் தேசிய செயர்பாட்டாளர்களின் கைது தொடர்பான செய்தியை தமிழ்வின் வெளியிட்டிருந்தது.

இன்று 13 மாதங்களுக்கு முன் நெதர்லாந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஒரு தமிழ் தேசிய செயர்பாட்டாளர் தொடர்பான செயதியை அவர் நேற்று தான் கைது செய்யப்பட்டு;ள்ளதாக செய்திவெளியிட்டுள்ளது தமிழ்வின்.
நெதர்லாந்து காவல்துறையினரால் தமிழ் தேசிய செயர்பாட்டாளர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக இந்த மாத நடுப்பகுதியில் நோர்வேயில் வசிக்கும் முன்னை நாள் தமிழீழ விடுதலைப் போராளி ஒருவர் விசாரனைக்குட்படுத்தப்பட்டிருந்தார். நெதர்லாந்து காவல்துறையினர் நோர்வே நீதிமன்ற அனுமதியுடன் இவரை விசாரனைக்குட்படுத்திய செயதியை நோர்வே ஊடகம் மே 18ம் நாள் வெளியிட்டிருந்தது.

இந்த செய்தியை வெளியிட்ட நோர்வே ஊடகம் விசாரனைக்குட்பட்ட முன்னை நாள் தமிழீழ விடுதலைப் போராளியின் படத்தை உருமறைப்பு செய்தே வெளியிட்டிருந்தது. ஆனால் தமிழ்வின் உள்ளபட் சில பொறுப்பற்ற தமிழ் ஊடகங்கள் அவரின் படத்தை இணைத்து அவர் சர்வதேச பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொய்யான செய்தியை வெளியிட்டிருந்தன.

இந்த விசாரனை தொடர்பாக சிங்கள ஊடகங்கள் வெளியிட்ட செயதிகளையும் தமிழ்வின் இணையம் மறுபிரசுரம் செய்திருந்தது.

புலம்பெயர் தமிழ் மக்களின் போராட்டங்களை இருட்டடிப்பு செய்யும் தமிழ்வின் இணையத்தளம் இப்பொழுது போராட்டங்களில் ஈடுபடும் புலம்பெயர் தமிழ் மக்களை பீதிக்குள்ளாக்கும் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகின்றது.

கடந்த முதலாம் நாள் முதல் நீதிக்கான மிதிவண்டிப்பயணம் மேற்கொண்டு கடந்த 18ம் நாள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் நீதி கேட்ட டென்மார்க் தமிழர்கள் இருவரின் போராட்டத்தையும் தமிழ்வின் இணையம் முழமையாக இருட்டடிப்புசெய்திருந்தது.

தமிழ்வின் இணையத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சிறிலங்கா பாராளமன்ற உறுப்பினர் சிறிதரனின் சகோதரரே நடாத்துவதாக உறுதிப்படுத்தாத செய்திகள் தெரிவிக்கின்றன.

 


%d bloggers like this: