டென்மார்க்

டென்மார்க் தொலைக்காட்சியிலும் சிறிலங்காவில் கொலைக்களம்

சிறிலங்கா அரசபடைகளால் 2009ம் ஆண்டின் முதல் பகுதியில் மட்டும் தமிழீழ மக்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலையின் ஆதாரங்களை தொகுத்து Channal 4 என்ற பிரித்தானிய தொலைக்காட்சியால் தயாரிக்கப்பட்ட சிறிலங்காவில் கொலைக்களம் என்ற விவரணப்படம் பல நாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்டுள்ளது.

வரும் புதன்கிழமை 10.08.2011 அன்று டென்மார்க் தொலைக்காட்சியிலும் ( DR2 ) இரவு 10.50 மணிக்கு ஒளிபரப்பபடும் என தெரியவந்துள்ளது.

சிறிலங்காவில் கொலைக்களம் ஒளிபரப்பப்பட்ட நாடுகளால் தமிழினப்படுகொலைக்கொலைக்கு எதிரான விசாரணையின் அவசியம் வலியுறுப்பட்டுள்ளது. அதே நேரம் Channal4 தொலைக்காட்சியின் விவரணப்படத்தை மற்றய தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவதை தடுக்கும் முயற்சியிலும் சிறிலங்கா அரசு முயன்றுவருகின்றது.