தமிழீழம்

"தமிழக முதல்வரே 3 தமிழ் உயிர்களை காப்பாற்றுங்கள்"- டென்மார்க் வாழ் தமிழீழ மக்கள்

ராசீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சாவுத்தண்டனை வழங்கப்பட்டிருக்கும் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரைக் காப்பாற்றுமாறு டென்மாhக் வாழ் தமிழ் மக்களும் தமிழக முதலமைச்சரை வேண்டுகின்றனர்.

துன்புறுத்தலினூடாக பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்த சாவுத்தண்டனையை ரத்து செய்யக்கோரப்பட்ட மனுவை இந்திய சனாதிபதி 11 அகவை கடந்து நிராகரித்துள்ளார்.
இந்திய சனாதிபதியின் இந்த முடிவை தொடர்ந்து தமிழகம் எங்கும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில் முருகன் , சாந்தன் மற்றும் பேரறிவாளனை தூக்கிலிடுவதற்கான நாள் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் இன்று வெளிவந்துள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஈழத்தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்ததும் ஈழத்தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசு புரிந்த இனப்படுகொலைக்காக தண்டிக்கப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் முதல்வர் அவர்களால் முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவாகள் மீது அனைத்துலக தமிழ் மக்கள் மிகுந்த நம்பிக்கை வைக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த காலப்பகுதியிலேயெ 3 தமிழ் உயிர்களையும் காப்பாற்றும் முக்கிய வேணடுகோளை தமிழக முதல்வர் அவர்களிடம் அனைத்துலக தமிழ் மக்கள் வேண்டிநிற்கின்றனர்.

படைக்கருவிகளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட டென்மாhக் நாட்டைச் சேர்ந்த ஒருவரை தம்மிடம் ஒப்டைக்குமாறு இந்தியா வேண்டிய பொழுதும் இந்திய நீதித்துறையால் குற்றம் சாட்டப்படுபவர்கள் துன்புறுத்தப்படுவதாக கூறி குறித்த நபரை ஒப்படைக்க டென்மார்க் நீதிமன்றம் ஒன்று தடைவிதித்திருந்தது.

டென்மார்க் நீதிமன்றத்தின் இந்த தடையால் இந்தியாவிற்கும் டென்மார்க்கிற்கும் இடையிலான உறவில் விரிசலும் ஏற்பட்டிருந்தது.
மேற்படி விடையம் இந்திய நீதித்துறையின் மேல் அனைத்துலகம் கொண்டுள்ள அவநம்பிக்கையை எடுத்தக்காட்டியுள்ளது.

3 தமிழ் உயிர்களையும் காப்பாற்றுமாறு தமிழக முதலவரை வேண்டும் தமிழக மக்களின் நியாயமான போராட்டத்தில் டென்மாhக் வாழ் தமிழ் மக்களாகிய நாமும் இணைந்துகொள்கின்றோம்.

–டென்மார்க் வாழ் தமிழீழ மக்கள்-   26-08-2011