வேலூர் அருகே ரயில்கள் மோதி விபத்து : 6 பேர் பலி

Home » homepage » வேலூர் அருகே ரயில்கள் மோதி விபத்து : 6 பேர் பலி

அரக்கோணத்தில் இருந்து காட்பாடி செல்லும் பயணிகள் ரயில் சித்தேரியில் சிக்னலுக்காக நின்றுகொண்டிருந்தது. இந்த ரயிலின் பின்னால் சென்னை கடற்கரையில் இருந்து வேலூருக்கு சென்றுகொண்டிருந்த ரயில் இரவு 8.50 மணிக்கு பயங்கர சத்தத்துடன் மோதியது.

இந்த விபத்தில் இரண்டு ரயில்பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தன. இந்த விபத்தில்  6 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இவர்கள் அனைவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

கவிழ்ந்து கிடக்கும் ரயில் பெட்டியில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று தெரிகிறது.


%d bloggers like this: