மாவீரர் நாள் கயிறுழுத்தல் போட்டியில் இவர்களையும் ஒருகணம்….

Home » homepage » மாவீரர் நாள் கயிறுழுத்தல் போட்டியில் இவர்களையும் ஒருகணம்….

நாட்டில் ஏற்பட்ட யுத்தம், அதன் காரணமாக தமிழ் இளைஞர், யுவதிகள் மீது சுமத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பன தமிழ் மக்களைப் படாதபாடுபடுத்தி வருகிறது.

இந் நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எத்தனையோ தமிழ் இளைஞர், யுவதிகள் சிறைச்சாலைகளில் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் வேளையில்,

திருக்கேதீஸ்வரம் மன்னாரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் (வயது-32) என்பவர் மேற்படி சட்டத்தினால் பிடிக்கப்பட்டு, சிறுநீரக நோயால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது இவரின் நிலைமை மோசமடைந்து செல்கின்றபோதும் இவருக்கு ஏற்பட்டுள்ள நோயைக் குணமாக்க முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவர் போரின்போது படுகாயமடைந்ததால் தனது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு கடந்த வாரம் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தார்.

இவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை அவசரமாகச் செய்ய வேண்டியுள்ளபோதும், இவரின் நோய் குணமாகாததால் அதனைச் செய்ய முடியாது என வைத்தியர்கள் கைவிரித்து விட்டனர்.

இதனால் மீண்டும் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

எனினும் இவரின் உடல் நிலை பெரிதும் பாதிப்படைய மீண்டும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இவருடைய சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான பண உதவிகள் அனைத்தும் புலம்பெயர் ஈழத் தமிழர்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற நிலையில் குறித்த சிகிச்சையை வேண்டிய காலப் பகுதியில் செய்வதற்கு இவரின் விடுதலையை எதிர்பார்த்து நிற்கின்றனர் அவரின் குடும்பத்தினர்.

ஆனால் இவ்வாறு வாழ்வின் இறுதிக் கட்டத்தில் உள்ள ஜெகதீஸ்வரனை வைத்தியசாலையிலும் சங்கிலியால் கட்டி சிகிச்சையளிக்கப்படுவது நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறலுக்கு ஓர் உதாரணமாக அமைகின்றது.

மிருகத்தனமான முறையில் மனித உயிரில் விளையாடும் மகிந்த அரசு, இவ்வாறு சிறுநீரகம் பாதிப்படைந்த ஒருவருக்குக் காலில் சங்கிலி போட்டுக் கட்டி வைக்கும் அளவுக்குக் கொடூரமான அரசு என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

எனவே, இவரின் நிலைமை ஜீரணிக்க முடியாதது. சங்கிலியால் கட்டப்பட்டு வைத்தியசாலையில் அதுவும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இவரின் நிலை நோய்த் தாக்கத்தைவிட வேதனையானதே.

இவருக்கு உதவி செய்ய விரும்புவர்கள் கீழுள்ள வழிகளில் தொடர்பு கொள்ள முடியும்
Nesakkaram E.V.
Hauptstrasse 210
55743 Idar-Oberstein
Germany

Telephone: +49 (0)6781 70723
Fax: +49 (0)6781 70723

nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு மாவீரர் தினக் கொண்டாட்டங்களை யார் செய்வது? அக் கொண்டாட்டங்கள் மூலம் எவ்வளவு பணம் சம்பாதிப்பது என நாளுக்கு நாள் திட்டம் இடும் நீங்கள், ஒரு தடவையேனும் தாயகத்தில் உள்ள மாவீரர்களின் உறவுகளை நினைத்துப் பார்த்ததுண்டா?


%d bloggers like this: