பகுத்தறிவு புலம்பெயர்

ஒரு சிங்களத் தீபாவளியும், ஒரு இந்து மத குருவும்! – நிஜமும், நிழலும்

ஆலயக் குருக்கள் பாஸ்கரனுக்கு அந்தக் குளிரிலும் வியர்த்து வழிந்தது.

‘அந்த முடிவை என்னால் எப்படி எடுக்க முடிந்தது?’ என்று திரும்பவும் ஒரு தடவை தன்னைத்தானே கேட்டுக்கொண்டார்.

இரந்துண்டு வாழும் தன் நிலையை எண்ணி வெட்கப்பட்டார். அவரால் என்னதான் செய்ய முடியும்? குலத்தில் வந்த குணமாக, அந்த இழிவும் அவருடன் ஒட்டியே நின்றது.

கண்ணாடியில், ஒரு தடவை தன் முகத்தைப் பார்த்தார்… அவருக்கே அது அசிங்கமாகத் தெரிந்தது.

‘நான் என்ன செய்வது… என் குலத்தின் பழக்கங்களிலிருந்து என்னால் மட்டும் வெளியேறிவிட முடியுமா? தேடி வந்தவர்களையும், நம்பியவர்களையும் மணி கிலுக்கி ஏமாற்றுவதைத் தவிர, அவர்களுக்கு நாம் என்னதான் செய்துவிட்டோம்.

‘ஆலயத்தினுள் வரும்போதே அர்ச்சனைத் தட்டம் வருகின்றதா? என்று பார்ப்பதே பழக்கமாகிவிட்டதே… கற்பூரத் தட்டில் காசு விழாவிட்டால், மனதுக்குள் திட்டுவது வாடிக்கையாகிவிட்டதே… இந்தப் பழக்கத்தை நான் மட்டும் விட்டுவிட்டால், இந்த நாடு திருந்திவிடுமா…?’

‘ஈழ விடுதலைப் போராட்டத்தில்கூட, எங்கள் இனத்தவர்கள் தாம் நோகடிக்கப்படாமல், எப்படியெல்லாம் தப்பித்துக்கொண்டார்கள். பாவம், பிழைக்கத் தெரியாத கத்தோலிக்க குருமார்கள் மக்களுக்கு உதவுகின்றேன் என்று, அங்கங்கே சிக்கிப் பலியானார்கள்… எங்கள் அனத்தவர்கள்போல் தப்பிப் பிழைக்கத் தெரியாத பரிதாபத்திற்குரியவர்கள்…’

குருக்களின் மனைவி, தூக்கத்தில் புரண்டு படுத்தார்… அந்த வயதிலும் அம்மணியின் அழகு அசத்தலாக இருந்தது. சும்மாவா… ஆலய வருமானத்தில் அள்ளிக் கொடுத்து அழகு பார்த்தவராயிற்றே…

‘சும்மா சொல்லக்கூடாது… அம்மணியின் அழகைப் பார்த்து, அன்று வீட்டுக்கு வந்திருந்த சிங்களத் தூதர் ஜொள்ளு விட்டதிலும் நியாயம் இருக்கிறது…’ என்று நினைத்துக்கொண்டார்.

குருக்கள் மனதில் கொஞ்சம் பொறாமையும், சந்தேகமும் கூடத் துளிர்த்தது…

‘அப்படியும் இருக்குமோ…?’ என்ற எண்ணம் நெஞ்சில் திக் எனத் தைத்தது.

‘அதற்காகத்தான்… தீபாவளி விழாவுக்கு என்னை அனுப்பி வைத்தாளோ…’ என்ற எண்ணமும் அவர் நெஞ்சில் கனலை மூட்டியது.

‘நானும் விருப்பப்பட்டுத்தானே போனேன்… பின்னர் எதுக்கு இந்த நினைப்பெல்லாம்…?’ என்று குருக்கள் தன்னைத் தானே தேற்றிக்கொண்டார்.

முள்ளிவாய்க்கால் பேரழிவிலிருந்தும் தப்பி, வவுனியா முள்வேலி முகாமில் இருந்து முதலில் வெளியேறிய தனது உறவுகளின் புத்திசாலித்தனத்தை எண்ணியபோது, குருக்களுக்கு அந்த வேளையிலும் சிரிப்பு வந்தது.

முதலில், ‘நாங்கள் பிரமணர்கள், எங்களை எல்லோருடனும் சோத்து வைப்பது மகா பாபம்’ என இராணுவத்திடம் சமரசம் செய்துகொண்டர்கள். பின்னர், தமிழர்களை கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்த மகிந்த ராஜபக்ஷவிடம் எங்கள் பிராமண அமைப்புக்கள் மண்டியிட்டு மகஜர் கொடுத்தது. எல்லா ஈனத் தமிழர்களும் முகாம்களில் சித்திரவதைகள் அனுபவிக்க, எங்கள் உறவுகள் மட்டும் வெளியெ வந்து சிங்கள அரசின் உதவியுடன் ராஜபோக வாழ்க்கையைத் தொடர்ந்தது… அப்போதும் இந்த கத்தோலிக்க குருமார் எங்களைப் போல் தந்திரத்துடன் நடந்து கொள்ளாமல், எங்கள் மக்களுடன்தான் நாங்கள் இருப்போமென்று இறுமாப்பாக இருந்துவிட்டார்கள்… பிழைக்கத்தெரியாத சாமிகள்… என்று நினைத்துக்கொண்டார்.

அது மட்டுமா…? நல்லூருக்கு சிங்கள மகிந்தவும், ராஜதானிகளும் வந்தபோதெல்லாம் எனது சொந்தங்கள் வெட்கம் பார்த்தா நின்றார்கள்? அப்படி வெட்கம் பார்ப்பதற்கும், அவர்களுடன் குரோதம் கொள்வதற்கும் நாங்கள் என்ன தமிழர்களா…? பிழைக்க வந்த பார்ப்பனாகள் இழப்பதற்கு யோசிப்பார்களா…? கிடைப்பது எதுவானாலும், யார் கொடுத்தாலும் பெற்றுக்கொள்வதுதானே பார்ப்பன தர்மம்… என்ற நினைப்புடன் தன் செயலையும் பொருத்திக்கொண்டார்.

எல்லாமே, சரியாகத்தான் தெரிந்தது.

இறுதி யுத்தத்தில் ஆயிரம், ஆயிரமாகத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது கூட, எங்கள் மத பீடங்களும், பீடாதிபதிகளும் மௌனம் காப்பதற்காகக் கூட சிங்கள ஆட்சியாளர்களிடமிருந் மிலை பெற்றுத்தானே இருந்தார்கள்… பாவம்… ஏமாளித் தமிழர்கள்… இவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்திருந்தால்… கிறிஸ்தவ நாடுகள் தலையிட்டு, அழிவைத் தடுத்திருக்கும். இவர்கள் இஸ்லாமியர்களாக இருந்திருந்தால்… இஸ்லாமிய நாடுகள் ஜிகாத் அறிவித்து, சிங்களத்துடன் போர் தொடுத்திருக்கும். இந்த அறிவுகெட்ட தமிழர்கள் இந்துக்களாக இருந்ததால்… நமது இந்தியாவும் சேர்ந்தே இவர்களை அழித்து முடித்தது… குருக்கள் வாய்விட்டுச் சிரித்தார்.

குருக்களின் மனைவி, இவரது சிரிப்பின் சத்தத்தில் திடுக்கிட்டு விழித்தார்.

‘என்ன… இந்த நேரத்தில்… இப்பிடி ஒரு சிரிப்பு…?’ என்று தூக்கக் கலக்கத்துடன் கோபமாகக் கேட்டார்.

‘எல்லாம் உன்னை நினைத்துத்தான்… இந்த வயதிலும், எப்படி அழகாக இருக்கிறாய்…?’ என்று அவரை நெருங்கினார்.
‘சீ… விடுங்கள்… எனக்குத் தூக்கம் வருகிறது…’ என்று பொய்யாகச் சிணுங்கினார் அம்மணி.

‘எனக்குத் தெரியாதா உன்னை…’ என்று இறுக அணைத்துக்கொண்டார் குருக்கள்.

‘விளக்கை அணைக்கும் நோக்கம் இல்லையா…?’ என்று சிணுங்கினார் அம்மணி.

‘தீபாவளிப் பரிசை நினைக்கும்போது விளக்கை அணைக்கவா தோன்றும்’ என்று காதில் கிசுகிசுத்தார் குருக்கள்.
‘சிறிலங்கா தூதரகத்தில் அவ்வளவு கிடைத்ததா…?’ என்று ஆவலுடன் கேட்டார் அம்மணி.

‘இல்லையானால், அத்தனை துணிவுடன் தூதரகத்துக்குள் செல்வேனா…? எத்தனை தமிழர்கள் வாசலில் நின்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள்… நான் கண்டு கொண்டேனா… கழுதை வேஷம் போட்டால் சுமக்கத் தெரியவேணும், நாய் வேஷம் போட்டால் பிழைக்கத் தெரிய வேணும்…. தமிழன் வேஷம் போட்டாலும், நான் பிராமணன்… வருமானம் வரும் என்றால்… சிறிலங்கா தூதரகத்துக்கும் செல்வேன்… அதில் வெட்கப்படவும், வேதனைப் படவும் நான் என்ன உண்மையான தமிழனா…?’ என்று அந்தக் கதகதப்பில் மெய்மறந்து கூறினார்.

‘தூதரகத்துக்குப் போனதால, கோவிலுக்கு தமிழ் ஆட்கள் வராமல் விட்டால்…?’ சந்தேகத்துடன் அம்மணி காதில் கிசுகிசுத்தார்.

‘அப்பிடியெல்லாம் நடக்காது… அந்த அளவுக்குத் தமிழன் பக்தி மார்க்கத்தைக் கடந்து சிந்திக்கமாட்டான். உலகத்தில் நாங்கள் உள்ளவரை, தமிழர்கள் அப்பிடிச் சிந்திக்க விட்டுவிடுவோமா…? நல்லூரில் மகிந்தவுக்கு நம்மவர்கள் பட்டுச் சாத்தி, மாலை போட்டு வரவேற்றார்கள். அதற்காக, நல்லூர் கோவிலில் கூட்டம் குறைந்துவிட்டதா…? புலிகள் இவாகளைத் திருத்திவிடுவார்களோ, என்ற பயமும் இப்போது இல்லை… இனி எங்களது ராஜ்ஜியத்திற்கு எந்தக் குறையும் வராது…’ என்றார் குருக்கள் நம்பிக்கையுடன்.

அம்மணியின் அணைப்பில் அவரது இணக்கம் தெரிந்தது. குருக்கள் சொர்க்கத்தை நோக்கி நகர்ந்தார்.