சிறிலங்கா

"இனப்பிரச் சினையின் மூலகாரணமே என் அப்பனின் செயல்தான்"- சந்திரிகா

Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707

எனது தந்தையார் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க கொண்டுவந்த தனிச்சிங்களச் சட்டமே இலங்கை இனப்பிரச்சினையின் மூலத்தவறாக அமைந்துவிட்டது.

இவ்வாறு ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

தனிச்சிங்களச் சட்டத்தால் தமிழ் மக்களுக்கும் ஏனைய சிறுபான்மை இனங்களுக்கும் சொல்லமுடியாத அளவுக்குப் பாதிப்புக்கள் ஏற்பட்டன.

அவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு என்பவற்றை அடைந்துகொள்வதில் தனிச்சிங்களச் சட்டம் பெரும் தடையாக அமைந்தது. குறிப்பாக தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குச் செல்வதைச் சிக்கலுக்குள்ளாக்கக்கூடிய சட்டங்கள் அனைத்தையும் ஆட்சியில் இருந்தவர்கள் நான் உட்பட கொண்டுவந்தனர்.

இது இனமுரண்பாடுகளை இன்னும் அதிகரிக்கச் செய்தது. இனத்துவ அடையாள அரசியல் ஒரு தவறான பாதையாகும். சாதகமான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமெனில் பன்மைத்துவமே பயன்படுத்தக்கூடிய சிறந்த தெரிவாகும்.

போர் முடிந்த பின்னரும்கூட தாம் எதிர்பார்த்த எதுவுமே நடைபெறாததால் மக்கள் சோர்வடைந்துள்ளனர். இளைய தலைமுறையினரிடமிருந்து உருவாகக்கூடிய புதிய அரசியல் தலைமை மூலமே போருக்குப் பின்னான காலத்திலாவது இனப்பிரச்சினைக்கு தீர்வினைக் காணமுடியும்.

இலங்கையின் இனப்பிரச்சினை காரணமாக அங்குள்ள மக்கள் எப்படி ஒரு சொர்க்கத்தை இழந்தார்கள் என்பதைத்தான் நீங்கள் (அமெரிக்கப் பல்கலைக்கழக மாணவர்கள்) எம்மிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.