தாயகம் உட்பட உலகமெங்கும் புலிகளின் குரலில் மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்பு

Home » homepage » தாயகம் உட்பட உலகமெங்கும் புலிகளின் குரலில் மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்பு

தேசியத்தலைவரின் 57ம் அகவை நிறைவுநாள் மற்றும் மாவீரர் நாள் தொடர்பான சிறப்பு ஒலிபரப்புக்களின் விபரங்களை புலிகளின் குரல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அன்பான தாயக தமிழக புலம்பெயர் தமிழ்பேசும் உறவுகளே, தமிழீழ மாவீரர்நாள் சிறப்பு ஒலிபரப்புக்கள், நவம்பர் மாதம் 26ஆம் 27ஆம் நாட்களில் எமது வானொலியுடாக உலகம் முழுவதும் ஒலிக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

.இவ்விரு நாட்களும் தாயகநேரப்படி அதிகாலை ஐந்துமணி தொடக்கம் இரவு பத்து மணிவரை எமது சிறப்பு ஒலிபரப்புக்கள் ஒலிக்கவுள்ளது. எமது ஒலிபரப்புக்களை எமது வலைத்தளத்திலும் மற்றும் செய்கோள் ஊடாகவும் நீங்கள் கேட்கலாம்.

தாயகம்,மற்றும் தமிழக உறவுகள் தங்களுக்குரிய இணையவேகத்துக்கு ஏற்றபடி எமது ஒலிபரப்புகளை கேட்கும் வண்ணம் எமது தளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.

மாவீரர்நாள் சிறப்பு ஒலிபரப்புக்களை உலகப்பரப்பில் ஒலித்துக்கொண்டுள்ள செய்கோள் மற்றும் பண்பலை வானொலிகள் ஊடாகவும் ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழீழத்தேசியத்தலைவரின் 57ஆவது அகவை நிறைவை முன்னிட்டு 26ஆம்நாள் சிறப்பு நிகழ்ச்சியில் உங்களின் வாழ்த்துக்களையும் கவிதைகளையும் நேரடியாக இணைத்து எமது ஒலிபரப்புக்கள் ஒலிக்கவுள்ளன.

எமது மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்புக்குரிய மேலதிக விபரங்களை எமது புலிகளின்குரல் வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.எமது வலைத்தள முகவரி :

Web: www.pulikalinkural.com

Mobile: mobilevot.com

.புலிகளின்குரல் நிறுவனம் அனைத்துலக ஒலிபரப்பு


%d bloggers like this: