மக்கள் அவலம்

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உடனடி உதவி.

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள்

வன்னிப் பெரு நிலப்பரப்பில் தற்போது பெய்து வரும் அடை மழையினால் பாதிக்கப்பட்ட மக்கள் இடம் பெயர்ந்து பாடசாலை மற்றும் தேவாலயங்களில் தஞ்சமடைந்துள்ளனர். நிரந்தர வருமானங்கள் எதுவும் இல்லாத இடம் பெயர்ந்த மக்கள் நாளாந்த உணவுப்பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான உணவுப்பொருட்கள் இன்றி பெரும் அவதிப்படுகின்றனர்.

பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் சில.
கராச்சி பிரதேரத்தில் உள்ள சாந்தபுரம் 900 குடும்பங்கள்
கண்டாவளை பிரதேரத்தில் உள்ள சிவபுரம் 254 குடும்பங்கள்
கண்டாவளை பிரதேரத்தில் உள்ள குறக்கன்கட்டு 300 குடும்பங்கள்

இந்த பகுதி மக்கள் போரினால் பாதிக்கப்பட்டு வவுனியா மெனிக் பாம் முகாமில் இருந்து 2010ம் மீள்குடியேற்றப்பட்டவர்கள். ஆனால் இவர்களுக்கு எதுவுத நிவாரணங்களும் வளங்கப்படவில்லை. நாளாந்த தொழிளாளர்களாக பெரும்பான்மையான இவர்கள் தொழில்புரிந்துவந்துள்ளனர்.

இப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்துவரும் நிறுவனங்களில் ஒன்றாகிய போலோ(BOLO) எனப்படும் உயிரொளி ஸ்தாபனம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர்உணவு வழங்குவதற்கான உதவிகளை வேண்டியிருக்கின்றனர்.

உயிரொளி ஸ்தாபனம் மேற்குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்காக 466.500 ரூபாய்களை எதிபார்க்கின்றனர். விபரம் இணைக்கப்பட்டுள்ளது.

அவசர உதவிக்கான விபரம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவிகளை நேரடியாக உயிரொளி ஸ்தாபனத்தினருக்கு அனுப்பிவைக்க விரும்புபவர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

உயிரொளி ஸ்தாபனத்தின் கடிதம்