யாழ்.பல்கலைக்கழக பக்கமாக வெடிச்சத்தம்!

Home » homepage » யாழ்.பல்கலைக்கழக பக்கமாக வெடிச்சத்தம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பக்கமாக சற்று முன் வெடிச்சத்தங்கள் கேட்டன. இதனால் வீதிகளில் பயணிகள் அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச் செல்வதையும் அவதானிக்க முடிந்தது.

அதேவேளை இன்று மாலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புறச் சூழல்களில் அதிக இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந் நிலையிலேயே இவ் வெடிச் சத்தம் வெடித்ததுடன், மக்கள் பதறியடித்தவாறு வீடுகளை நோக்கிப் புறப்பட்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளி வீதிகளில் தற்போது வாகனங்கள் சகிதம் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் பல்கலைக்கழகக் காவலாளியுடன் இராணுவ வீரர்கள் பேச்சுக்கள் நடத்தி வருவதும் எம்மால் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பல்கலைக்கழகச் சூழலில் இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் அப் பிரதேசவாசி ஒருவர் தகவல் தருகையில்,

இது ஒரு துப்பாக்கி வேட்டுச் சத்தம் என்பதை உறுதிப்படுத்த முடிகின்றது என்பதுடன், பறவைகளும் பறந்த சத்தமும் கேட்டதாகவும் தெரிவித்தார்.

இருந்தும் இரவு வேளை என்பதால் மேலதிக தகவல்களைப் பெற முடியாதுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.


%d bloggers like this: