பிரபாகரன் எங்கிருக்கிறார் என்ன சொல்ல இருக்கிறார் என ஆர்வத்தோடு காத்திருப்பதை விட இதுவரையில் பிரபாகரன் சொன்னவற்றை பின்பற்றுவோம் -தமிழருவி மணியன்

Home » homepage » பிரபாகரன் எங்கிருக்கிறார் என்ன சொல்ல இருக்கிறார் என ஆர்வத்தோடு காத்திருப்பதை விட இதுவரையில் பிரபாகரன் சொன்னவற்றை பின்பற்றுவோம் -தமிழருவி மணியன்

தமிழருவி மணியன்உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழக்கூடிய தமிழர்கள் மறவாமல் நெஞ்சில் நிறுத்தி மாபெரும் விழாவாக நடத்தக்கூடிய ஒரேயோரு நாள் இந்த மாவீரர் நாளாகும் என்கிறார் எழுத்தாளரும் சிறந்த பேச்சாளருமான தமிழருவி மணியன்.

சொந்த மண் உலக அரங்கில் உருவாகவும் ஐக்கிய நாடுகள் சபையில் தமிழனுக்கென்று ஒரு தனிநாட்டுக் கொடி சுடர் விட்டுப்பறக்கவும் தங்கள் உயிரை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட மகத்தான வீரர்களுக் நன்றி உணர்வுடன் நாம் நம்முடைய அன்பையும் அவர்கள் பால் நாம் கொண்டிருக்கக்கூடிய ஈடுபாட்டையும் அவர்கள் விட்ட இடத்திலே நாம் தொடர வேண்டிய பணியில் நமக்குள்ள உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துகிற வைகயில இந்த மாவீரர் தினத்தை நாம் கொண்டாடுகிறோம்.

பிரபாகரன் எங்கிருக்கிறார் என்று ஆய்வு நடத்துவதை விட பிரபாகரன் என்ன சொல்ல இருக்கிறார் என ஆர்வத்தோடு காத்திருப்பதை விட இதுவரையில் பிரபாகரன் இதுவரையில் எதைச் சொன்னார்?. என்கிற புரிதலோடு நாம் நடக்க வேண்டும். என்பதுதான் இன்றைக்கு ஒவ்வொரு தமிழனும் எடுக்க வேண்டிய தருணம் இதுவென தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

ஒரு நாடு வந்து வாய்ப்பது என்பது அவ்வளவு எளிதில் சாத்தியப்படக்கூடிய ஒன்றல்ல. காரணம் இன்றைய சமுதாயம் முழுக்க முழுக்க நுகர்வு வெறிக்கு உட்பட்ட சமுகமாக மாறியிருக்கிறதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒவ்வொரு நாடும் தன்னளவில் பொருளாதார சந்தையை விரிவு படுத்திக் கொள்வதற்கு எந்த சமரசத்தையும் செய்துகொள்ள தயாராக இருக்கக் கூடிய மிக மோசமான காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.

தனித்தமிழ் நாட்டை ஈழத்தில் உருவாக்குவதற்காக தனித்தமிழ் கொடியை ஈழத்தில் பறக்கவிடுவதற்காக ஈழத்திலே இருக்கின்ற ஒவ்வொருவரும் அனைத்து உரிமைகளையும் அனைத்து வாய்ப்புகளையும் சுதந்திரமாய் சுயேற்சையாய் பெற்று சிறப்பதற்காக தங்களுடைய உயிரை இழந்தவர்கள் எத்தனை பேர் தங்களுடைய உடைமைகளை இழந்தவர்கள் எத்தனை பேர் என தமிழருவி மணியன் கேள்வியெழுப்பியுள்ளார்.


%d bloggers like this: