தமிழீழம்

தமிழீழத்திலே போராளிகளால் மாவீர நினை வேந்தல்.

தமிழீழத்திலே போராளிகளால் மாவீர நினை வேந்தல்.
தமிழீழத்திலே போராளிகளால் மாவீர நினை வேந்தல்.

தாயகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் போராளிகள் மற்றும் மக்களால் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.

26.11.2011 அன்றான தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் 27.11.2011 அன்றான மாவீரர் நாள் என்பன தாயகத்தில் போராளிகளால் கொண்டாடப்பட்டுள்ளது.

தமிழீழ தேசத்தினை இன்று எதிரியின் வல்வளைப்பில் உள்ள நிலையில் தமீழ மாவட்டத்தில் உள்ள மக்கள் எழுச்சியாக தங்கள் வீடுகளிலும் தாங்கள் தாங்கள் வாழும் இடங்களிலும் மாவீரர்களை மனதில் நிறுத்தி வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.

இன்னிலையில் தாயகத்தில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் போராளிகளினால் மாவீரர் வணக்க நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இன்நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்ப்பட்டு தொடர்ந்து மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழீழத்திலே தான் எமது வீரர்களே, விதையுண்ட மாவீர சொந்தங்களுக்கு இராணுவத்தின் கண்ணுக்குள்ளே தீபம் எற்றிஅகவணக்கத்தை செய்தமையானது மாவீரர்களிற்கே மனம் நிறைவு கட்டாயம் கொடும் என்பதில் எந்த ஐயம் இல்லை.