அனைத்துலகம்

கொல்கத்தா மருத்துவமனையில் தீ விபத்து: 73 பேர் பலி!

கொல்கத்தா மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துவிட்டது. பிரேத பரிசோதனைக்குப் பின்னர் 40 பேரின் உடல்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

விபத்து நிகழ்ந்த ஏ.எம்.ஆர்.ஐ. தனியார் மருத்துவமனையின் லைசன்சை ரத்து செய்து முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். மருத்துவமனை நிர்வாகிகளை உடனடியாக கைது செய்யவும் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

விபத்து ஏற்பட்டால் தப்பிக்க உரிய வசதி செய்யாத நிர்வாகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.