சிறிலங்கா

தவறிருந்தால் கத்தோலிக்க திருச்சபையிடம் மன்னிப்பு கோருவோம்: சிறிலங்கா

ராவதாவத்தை சிறுவர் இல்லம் சுற்றிவளைக்கப்பட்டு அதனை நடத்தி வந்த அருட்சகோதரி ஒருவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அரசாங்கம் தரப்பில் தவறு இருக்கும் பட்சத்தில் கத்தோலிக்க திருச்சபையினரிடம் மன்னிப்பு கோருவோம் என்று சிறிலங்கா அரசாங்கத்தின் ஊடக பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இந்த விவகாரம் நீதி மற்றும் உள்ளகப் பிரச்சினைக்குள் சிக்கியிருப்பதால் இது தொடர்பான திடீர் முடிவுகளையோ அறிவிப்புக்களையோ விட முடியாத நிலையில் சிறிலங்கா அரசாங்கம் காணப்படுகின்றது.

மேற்படி விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது. இதன்மூலம் குறித்த சிறுவர் இல்லத்திலோ அல்லது அதனை நடத்தி வந்த அருட்சகோதரிகள் மீதோ தவறுகள் இல்லாத பட்சத்தில் அரசாங்கம் பகிரங்கமாக மன்னிப்பு கோரும் என்றும் அமைச்சர் கூறினார்.