சிறிலங்கா

மகிந்தவினால் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்ட நபர் மகள் மீது பாலியல் குற்றம் புரிந்தார்!

சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்சவினால் அண்மையில் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்ட நபர் ஒருவர் தன்னுடைய மகளை காட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி உள்ளார். இவரை மாத்தளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த சந்தேகநபர் இதற்கு முன்னர் மூன்று பாலியல் குற்றங்களை புரிந்தது நீதிமன்றதில் நிரூபிக்கப்பட்டு 15 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.  ஆனால் நீதிமன்றம் சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கிய சில காலங்களிலேயே மகிந்த ராசபக்ச இவரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார்.  விடுதலையாகி வந்தவுடன் மீண்டும் இந்நபர் பாலியல் குற்றத்தை புரிந்துள்ளார்.

இலங்கை சிறைகளில் எந்த குற்றமும் செய்யாது தமிழர்கள் பல ஆண்டுகளாக விடுதலை செய்யப்படாது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் வேளையில் பாரிய குற்றவாளிகளை மகிந்த ராசபக்ச பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்து வருவதால் நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன.