புலம்பெயர்

அகதி குடும்பம் ஒன்றுக்கு ஆறு வருடத்தின் பின்னர் பிரிட்டனில் கிடைத்த நியாயம்

பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப் பட்டதால் ஜேர்மனிக்குச் சென்றிருந்த இலங்கை குடும்பம் ஒன்றுக்கு மீண்டும் பிரித்தானியாவில் குடியேறி வாழ்வதற்கான உரிமை உண்டு என பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வடக்கு லண்டனில் வசித்து வந்த இக்குடும்பம் சட்டத்திற்பு முறணாக தடுத்து வைக்கப்பட்டிருந்தமையால் கடந்த 6 வருடங்களுக்கு முன் ஜெர்மனியில் தஞ்சம் புகுந்தது.

இவர்கள் தாக்கல் செய்திருந்த வழக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஒன்றில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இக்குடும்பத்திற்கு 37ஆயிரம் பவுண்ஸை நட்டஈடாக வழங்கவேண்டும் என பிரித்தானிய உள்நாட்டு செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் 28 நாட்களுக்குள் இத்தொகையை செலுத்த வேண்டுமென நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

2006 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் பிரித்தானிய குடிவரவு மற்றும் காவல்துறை அதிகாரிகளினால் இக்குடும்பத்தினர் தடுத்து வைக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.