சிறிலங்கா

சிறிலங்காவில் பிக்குமார்களின் வழக்குகளை விசாரிக்க தனியொரு நீதிமன்றம்.

பிக்குமார் தொடர்பான சட்ட ரீதியான வழக்குகளை விசாரணை செய்வதற்காக தனியானதொரு நீதிமன்றம் விரைவில் நிறுவப்படும் என்று சிறிலங்கா பிரதமர் டீ.எம்.ஜயரத்ன இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த நீதிமன்றம் அமைப்பது தொடர்பான சட்டமூலம் சிறிலங்கா அமைச்சரவையினூடாக தயாரிக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

பௌத்த பிக்குமார்கள் தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேற்படி நீதிமன்றம் நிறுவப்படுவதால் அவை மிக விரைவில் தீர்க்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் மேலும் தெரிவித்தார்.