இந்தியா

அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வினர் உண்ணாவிரதம்

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழகத்தின் உறுதிப்பாட்டை நிலைநாட்டுவதற்கும், மத்திய அரசின் உடனடியான கவனத்தை ஈர்க்கும் வகையில் 12 ந் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகரங்களிலும், நகரங்களிலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஒருநாள் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவது என்று தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, தென் சென்னை மற்றும் வடசென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் வருகிற 12 ந் தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. உண்ணாவிரதத்தை கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் தொடங்கி வைக்கிறார். தி.மு.க. தலைவர் கலைஞர் முடித்து வைக்கிறார்.