தமிழீழம்

உறவுகளின் விடுவிப்பிற்காக யாழில் அணிதிரண்டு மக்கள் ஆர்பாட்டம்; காவற்றுறையினர் தாக்குதல்

உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று யாழ்ப்பாணத்தில் காணாமற் போனோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இதன்போது ஆர்பாட்டக்காரர்களுக்கும் காவற்றுறையினருக்குமிடையே முறுகல்நிலை ஏற்பட்டது. அதனையடுத்து காவற்றுறையினர் ஆர்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், முன்னாள் போராளிகளை விடுவிக்கக் கோரியும், காணாமல் போனோர் தொடர்பில் அரசு தனது நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்க வேண்டும் எனக் கோரி அரசியல் கட்சிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளை ஒன்றிணைத்து யாழ்ப்பாணத்தில் காணாமற்போனோரைத் தேடியறியும் குழு இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டது.

முன்னாள் போராளிகளின் உறவினர்கள், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இவ் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.