தமிழீழம் புலம்பெயர்

நிர்வாணமாக நின்று மாணவியை கூப்பிட்ட சிறிலங்கா படையினனுக்கு கல்லெறி.

பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய மாணவியை முகாமில் விர்வாணமாக நின்று கூப்பிட்ட சிறிலங்கா படையினன் மீது ஆத்திரம்முற்ற மாணவி கற்களை வீசி தாக்க முற்பட்ட சம்பவம் அளவெட்டியில் நேற்று பகல் நடைபெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து அங்கு பொது மக்கள் கூடியவுடன் முகாமில் இருந்த ஏனய சிறிலங்கா படையினர் தலையிட்டு பொதுமக்களை அங்கிருந்து விரட்டியுள்ளனர்.

தெல்லிப்பளையில் இருந்து அளவெட்டிக்குச் செல்லும் வீதியில் எட்டாம் கட்டையில் அமைந்துள்ள கடை ஒன்றில் நிலை கொண்டுள்ள சிறிலங்கா படையினர் அப்பகுதியால் செல்லும் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் மீது தகாத வார்த்தைகளை பிரயோகிப்பது மற்றும் உள்ளாடைகள் மட்டுமுடன் நின்று சைகை செய்தல் உட்பட பல்வேறு பாலியல் சேட்டைகளை செய்துவருவது வழமையாகியுள்ளது.