புலம்பெயர்

ஜேர்மனியில் ஆட்கடத்தல்! மூன்று தமிழர்கள் கைது.

ஜெர்மனியில் இருவரைக் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு மூன்று இலங்கை தமிழர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா வோட்ச் இணையம் தெரிவித்துள்ளது

23- 33 இற்றும் இடைப்பட்ட வயதைக் கொண்ட இவர்கள், 42 மற்றும் 15 வயதுகளை கொண்ட இருவரை கடத்தி அவர்களிடம் கொள்ளையை நடத்தினர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனார்.

கடந்த 15 ஆம் திகதி இந்த சம்பவம் Ravensburg என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளதாக சிறிலங்கா வொட்ச் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இது ஐரொப்பியாவில் இடம்பெறும் சாதாரண குற்றச்செயல் என்று ஜெர்மனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.