இந்தியா

முல்லை பெரியாறு விவகாரம் :மதிமுக நாளை ஆலோசனை

ஈரோடு மாவட்ட மதிமுக செயலாளரும், ஈரோடு எம்.பி.யுமான கணேசமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈரோடு மாவட்ட மதிமுக ஒன்றிய, நகர செயல்வீரர்கள் கூட்டம் 11ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட அலுவலகமான அண்ணா அறிவகத்தில் மாவட்ட அவைத்தலைவர் குழந்தைவேல் தலைமையில் நடக்கிறது.

இதில், முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக கேரள அரசின் பொய் பிரசாரத்தை கண்டிக்கும் வகையில் வரும் 21ம் தேதி நடைபெற உள்ள சாலை மறியல் போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், தலைமை கழக செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்