தமிழீழம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு ஒருபோதும் விலக மாட்டேன் – மு.றெமீடியஸ்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்து ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் தலைமையிலான யாழ். மாநகரசபை ஆட்சியைக் கவிழ்க்கப்போவதாகவும் தான் சுகந்திரக் கட்சியில் இணையப் போவதாகவும் கூறுவது சுத்தப் பொய் என யாழ். மாநாகர சபை உறுப்பினரும் பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணியுமான றெமீடியஸ் தெரிவித்துள்ளார்.

என் மீது வேண்டும் என்று சிலர் சேறு பூச முனைகின்றனர். நான் பிரபல சட்டத்தரணி என்பதால் எனது பெயருக்கு அவப்பெயரை உண்டு பண்ணுவதற்காக திட்டமிட்டு செயற்படுகின்றனர்.

எது எப்படி நடந்தாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டு நான் ஒருகாலமும் விலக மாட்டேன். தமிழ் தேசியத்திற்கான எனது அரசியல் பயணம், தமிழ் மக்களின் அரசியல் சமூக உரிமைகளுக்காக என்றும் குரல் கொடுப்பதுடன் பிழையிருப்பின் அஞ்சா நெஞ்சத்துடன் அதை சுட்டியும் காட்டுவேன் என்று கூறினார்.

ஈ.பி.டி.பி நிஷாந்தன் என்பவர் அரசியல் பாடத்தைக் கூட பள்ளிக் கூடத்தில் கற்றுக்கொள்ளாத ஒருவர். இவர் ஊடகங்களுக்கு விடுக்கும் செய்திக்கு நான் பொறுப்பாளி அல்ல எனத் தெரிவித்ததோடு, ‘எனக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பது உண்மை. ஆனால், அதற்காக நான் வேறு கட்சியுடன் இணைந்துகொள்ள முயல்வதாகத் தெரிவிக்கப்படும் செய்திகளில் எந்த உண்மையும்