சிறிலங்கா

சிறிலங்காவில் மலசலகூடத்திலிருந்து மனித எலும்புகள் மீட்பு.

சிறிலங்காவில் கொத்மலையிலுள்ள வீடொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் மனித எலும்புகளை பரிசோதனைக்குட்படுத்துவதற்காக கொழும்பிலுள்ள இரசாயனப் பகுப்பாய்வுப் பிரிவுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கையை கம்பளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கொத்மலையில் அமைந்துள்ள மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான விடுதியொன்றிலிருந்தே இந்த மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கம்பளைப் பொலிஸார் கூறினர்.

நேற்று சனிக்கிழமை மாலை ஊழியர்கள் சிலர் இந்த விடுதியை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது விடுதியின் மலசலகூடத்திற்குள் சில மனித எலும்புகள் காணப்பட்டதைத் தொடர்ந்து தமக்கு தகவல் வழங்கியதாகவும் சிறிலங்கா பொலிஸார் குறிப்பிட்டனர்.

கம்பளை பொலிஸார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.