சிறிலங்கா

சிறிலங்கா பாதுகாப்பு படையினரால் கடத்தப்பட்ட குகன், லலித் ஆகியோரை விடுதலை செய்!- கொழும்பில் ஆர்ப்பாட்டம்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று யாழில் காணாமல் யாழில் காணமல் போன லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் ஆகியோர் கடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரப்பாட்டமொன்று இடம்பெற்றது.

நாம் இலங்கையர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்பாட்டத்தில் நாம் இலங்கையர் அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் உதுல் பிரேமரத்ன உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, சிறிலங்கா பாதுகாப்பு படையினரால் கடத்தப்பட்ட குகன், லலித் ஆகியோரை உடன் விடுதலை, கடத்தியவர்களை விடுதலை செய் போன்ற சுலோகங்களை கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.